current2

தமிழகம்

1.இந்திய சுற்றுலா அமைச்சம் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து போகும் மாநிலம் தமிழ்நாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவிற்கு  வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் 20 சதவீதம் பேர் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.2015ம் ஆண்டில் இந்தியாவிற்கு 23 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
2.தூய்மை இந்தியா திட்டத்தில் தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டியவர்களுக்கு இலவச கபாலி திரைப்பட டிக்கெட்டுகளை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்று வழங்கினார்.

இந்தியா

1.உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.
2.கியர் இல்லாத ஸ்கூட்டர்களை இயக்குவதற்கு, 16 வயதை எட்டிய சிறுவர்களுக்கும் ஓட்டுநர் உரிமங்களை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
3.ஆதார் அட்டைகளை உருவாக்கி விநியோகிக்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யு.ஐ.டி.ஏ.ஐ.) தலைமைச் செயல் அதிகாரியாக அஜய் பூஷண் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
4.2016ம் ஆண்டிற்கான உலக அழகன் போட்டி இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் ரோஹித் கன்டெல்வால் உலக அழகன் பட்டத்தை வென்றார். உலக அழகன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம்

1.அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுவார் என்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
2.அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செலுத்திய “கெப்ளர்’ விண் கலம் அனுப்பிய தகவல்கள் மூலம் 104 புதிய கிரகங்களை விஞ்ஞானி கள் கண்டறிந்தனர்.அவற்றில் 4 கிரகங்கள், பூமியைப் போல் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
3.22 ஜூலை 1933-ம் ஆண்டு வைலி போஸ்ட் 15,596 மைல்களை 7 நாட்கள், 18 மணி, 45 நிமிடங்களில் உலகைக் கடந்து தனியே உலகைச் சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.
4.விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்ட நாள் 22 ஜூலை 1999.

விளையாட்டு

1.மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 3 ஆயிரம் ரன்களை எட்டினார் கோலி. இந்த மைல்கல்லை எட்டிய 19-வது இந்தியர் கோலி ஆவார்.அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை எட்டிய இந்தியர்கள் வரிசையில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது கோலிக்கு 42-வது டெஸ்ட் போட்டியாகும்.இந்தியாவுக்கு வெளியே அதிக சதங்கள் எடுத்த இந்திய கேப்டன் அசாரூதின். 5 சதங்கள் (41 இன்னிங்ஸ்கள்). அந்தச் சாதனையை 12 இன்னிங்ஸ்களில் சமன் செய்துள்ளார் கோலி.
2.அயல்நாட்டில் இரட்டைச் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன்  விராட் கோலி  என்ற சாதனையை புரிந்தார்.மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இந்த சாதனையை புரிந்தார்.