தமிழகம்

1.தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணிபுரிந்து வரும் நீதிபதிகள், வனச் சட்டங்கள் குறித்து நேரடியாக அறிந்து கொள்வதற்காக இந்தியாவில் முதன் முறையாக முதுமலையில் பயிற்சி மற்றும் களப்பயிற்சி முகாம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் ஜூன் 17 & 18ல் நடைபெற்றது.


இந்தியா

1.இந்தியா முழுவதும் உள்ள காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), Madadgaar என்ற பெயரிலான கட்டணமில்லா இலவச சேவை அழைப்பு எண் 14411 ஐ அறிமுகம் செய்துள்ளது.
2.மாடு மற்றும் ஒட்டகம் போன்றவற்றின் இறைச்சி மற்றும் விற்பனை ஆகியவற்றை தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டதால், மாடுகளை இணையம் மூலம் விற்பனை செய்ய தெலுங்கானா மாநில அரசு http://pashubazar.telangana.gov.in என்ற இணைய சந்தையை உருவாக்கியுள்ளது.மேலும் PashuBazar என்ற அலைபேசி செயலியும் (app) வெளியிடப்[பட்டுள்ளது.


உலகம்

1.செர்பியாவில் புதிய பிரதமராக ஓரினச் சேர்க்கையாளர் அனா பிரபிக் என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை அதிபர் அலெக்சாண்டர் வுசிக் நியமனம் செய்துள்ளார்.
2.ஜப்பானிய மிகச்சிறந்த நாவலாசிரியர் ஹாரூகி முராகாமி 10 ஆண்டுகள் கழித்து தன்னுடைய புதிய சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.”மென் வித்தவுட் வுமன்” என்ற அந்த புதிய நூல் முரகாமி எழுதிய ஏழு சிறுகதைகளின் தொகுப்பு ஆகும்.
3.உலகையே அச்சுறுத்தி வரும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக புதிய அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.இந்த அலுவலகம் ஐநா துணைப் பொதுச்செயலாளர் தலைமையின் கீழ் செயல்படும்.
4.யாஹூ (Yahoo) நிறுவனத்தை, அமெரிக்காவின் பிரபல தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான Verizon சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் விலைக்கு வாங்கியுள்ளது.யாகூ நிறுவனத்தின் சொத்துக்களை தனது AOL வியாபார நிறுவனத்துடன் இணைத்து Oath எனும் புதிய நிறுவனத்தினை உருவாக்க Verizon தீர்மானித்துள்ளது.


விளையாட்டு

1.ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தோனேஷியா ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் இறுதிப்போட்டியில், இந்தியாவின் K. ஸ்ரீகாந்த், ஜப்பானின் கசுமாச சகாய்யை (Kazumasa Sakai) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.1930 – ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது.
2.1978 – புளூட்டோவின் சரோன் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு