current-affairs

தமிழகம்

1.காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த யோகா நிகழ்ச்சியில் கே.பி ரஞ்சனா  என்ற பெண் வழக்கறிஞர் தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
2.இன்று நடிகர் விஜய் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 22 ஜூன் 1974.

இந்தியா

1.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.26 மணிக்கு ஒரே நேரத்தில் 20 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி34 ராக்கெட்.இதன் எடை 320 டன். உயரம் 44.4 ஆகும்.இதில் முக்கிய செயற்கைக்கோள் இஸ்ரோவின் கார்டோசாட்-2,பூமியை படமெடுத்து அனுப்புதல்,வரைபடம்,நீர்வள மேம்பாடு, கடற்போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகும்.
2.ராஜ்கோட்டில் நேற்று நடந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் 2000 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு சீனாவின் கின்னஸ் ரெக்கார்டை முறியடித்தனர்.
3.2014 ம் ஆண்டின் கணக்கின் படி மிக அதிகபட்சமாக கேரளாவில் ஒரு மணிநேரத்திற்கு 5 விவகாரத்துகளும், நாள் ஒன்றிற்கு 130 விவாகரத்துகளும் வழங்கப்படுகின்றன.கேரளாவில் 2014ம் ஆண்டு மட்டும் 47,525 விவகாரத்து வழக்குகள் பதியப்பட்டுள்ளன.மகாராஷ்டிரா 2வது இடத்திலும், கர்நாடகா 3வது இடத்திலும், மத்திய பிரதேசம் 4வது இடத்திலும், அரியானா 5வது இடத்திலும் உள்ளன.அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபர கணக்கில் இவ்விபரம் தெரிய வந்துள்ளது.

உலகம்

1.என்ஜின் மாசு வெளியேறுவதில் மோசடி காரணமாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்  வோல்க்ஸ்வோகன் நிறுவன தலைவர் மத்தியாஸ் முல்லர்.
2.சீனாவின் யூலின் பகுதியில் வருடாந்தர  நாய் இறைச்சி திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.இவ்விழா 10 நாட்கள் நடைபெறும்.

விளையாட்டு

1.இந்திய முன்னாள் தடகள வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ் கேரள மாநில விளையாட்டு வாரியத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.