நடப்பு நிகழ்வுகள் – 22 ஜனவரி 2017
இந்தியா
1.இமாச்சல பிரதேசத்தின் தலைநகராக சிம்லா உள்ளது. இந்நிலையில் “தரம்சாலாவை” இமாச்சல பிரதேசத்தின் இரண்டாவது தலைநகராக அம்மாநில முதல்வர் வீரபத்ர சிங் அறிவித்திருக்கிறார்.
2.குஜராத் மாநிலம், ராஜ்கோட்டிலுள்ள கக்வாட் என்ற இடத்தில் நேற்று ஒரே நேரத்தில் சுமார் 3.5 லட்சம் பேர் தேசிய கீதம் பாடி, புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.இந்த சாதனை “கின்னஸ்’ சாதனை பட்டியலில் இணைந்துள்ளது.இதற்கு முன்பு வங்கதேசத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் சுமார் 2.5 லட்சம் பேர் தேசிய கீதம் பாடியதே இதுவரை உலக சாதனையாக இருந்து வந்தது.இப்பொழுது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
உலகம்
1.அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் 4 வயது சிறுமி பாலியாமேரி அரானா 1000 புத்தகங்கள் படித்ததால் நூலகராக ஆகியுள்ளார்.இதன் மூலம் உலகிலேயே மிக குறைந்த வயதில் நூலகரான சிறுமி இன்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
விளையாட்டு
1.இமாச்சல பிரதேச மாநில ஒலிம்பிக் சங்க தலைவராக முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவர் அனுராக் தாகூர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மேலும் வீரேந்தர் கன்வார் சீனியர் துணை தலைவராகவும், ராஜேஷ் பண்டாரி பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம்
1.ஜெட் விமானம் முதன் முறையாக சேவைக்கு வந்த நாள் 22 ஜனவரி 1952.
2.ஆப்பிள் மக்கிண்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 22 ஜனவரி 1984.
3.ஆர்க்குட் தொடங்கப்பட்ட நாள் 22 ஜனவரி 2004.
– தென்னகம்.காம் செய்தி குழு