Current-Affairs-Updates

தமிழகம்

1.சென்னை விமான நிலையம் – சின்னமலை இடையேயான முதல் மெட்ரோ ரயிலை கோவையைச் சேர்ந்த நளினி என்ற பெண் டிரைவர் இயக்கினார்.

இந்தியா

1.ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் மரபாக இருந்து வந்த ரயில்வே பட்ஜெட்டை மாற்றி அமைக்க  மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டையும் சேர்த்து தாக்கல் செய்யப்படும் என பிரதமர் மோடி தலைமையில் தில்லியில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2.இந்தியாவின் ‘பராக் – 8’ ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.இந்த ஏவுகணை இந்தியா-இஸ்ரேல் கூட்டு முயற்சியில் மேம்படுத்தப்பட்டுள்ளது.அணு ஆயுதங்களை சுமந்தபடி தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.இந்த ஏவுகணை 2.7டன் எடையும் 4.5 மீட்டர் நீளமும் உடையது.இந்த ஏவுகணையை  ஒடிசாவின் சாண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில்  இருந்து சோதனை செய்யப்பட்டது.

உலகம்

1.இன்று மைக்கேல் பாரடே பிறந்த தினம்(Michael Faraday Birth Day).
மின்சாரம் நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மருத்துவத் துறைகளிலும் மின்சாரம் பயன்படுகிறது. மின்சாரம் இல்லை என்றால் தொலைகாட்சி, ரயில், மின் விசிறி, கணினி, தொழிற்சாலைகள் என பலவும் இயங்காது. மின்சாரம் உற்பத்தி செய்யும் முறையை முதன்முதலில் மைக்கேல் பாரடே கண்டுபிடித்தார். இவர் 1791ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று இங்கிலாந்து நாட்டில் பிறந்தார்.
2.இன்று உலக கார் இல்லாத நாள்(World Car Free Day).
நகரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக நடந்து செல்வதே பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. நடந்து செல்லும் தூரத்திற்குக்கூட காரை எடுத்துச் செல்கின்றனர். ஆகவே மிக அருகில் உள்ள இடங்களுக்கு சைக்கிள் அல்லது நடந்து செல்ல வேண்டும். காரை செப்டம்பர் 22 அன்று ஒரு நாள் பயன்படுத்தாமல் இருக்க வாஷிங்டன் போஸ்ட் இத்தினத்தை 1995இல் அறிவித்தது.
3.அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தானுந்து முதன் முதலாகக் காட்சிப்படுத்தப்பட்ட நாள் 22 செப்டம்பர் 1893.
4.ஜெர்மனியின் எம்டன் போர்க்கப்பல் சென்னையில் குண்டு மழை பொழிந்த நாள் 22 செப்டம்பர் 1914.

விளையாட்டு

1.இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையே கான்பூர் கீரின்பார்க் மைதானத்தில் இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.இது இந்தியா விளையாடவுள்ள 500-வது டெஸ்ட் போட்டி ஆகும்.1932ம் ஆண்டு இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியை தொடங்கியது.சி.கே.நாயுடு இந்தியாவின் முதல் டெஸ்ட் கேப்டனாக இருந்தார்.முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா,இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது. இந்தியா விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.1952ல்  இந்தியா-இங்கிலாந்து எதிராக மோதிய  டெஸ்ட் போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைப்பெற்றது.டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் டெஸ்ட் விளையாடிய அணிகள் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியா அணிகளும் ஆகும்.
2.இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ரித்து ராணி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
3.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதன் முதலாக ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.எனவே பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான தண்டாயுதத்தை ஐசிசி வழங்கியுள்ளது.ஐ.சி.சி.யின் தலைவர் டேவிட் ரிச்சர்ட்சனிடம் இருந்து மிஸ்பா உல் ஹக் தண்டாயுதத்தை பெற்றார்.இந்த விழாவானது லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்றது.
4.பிசிசிஐ-யின் செயலராக அஜய் ஷிர்கே மீண்டும் நியமிக்கப்படுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் எம்எஸ்கே பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தேர்வுக்குழுவில் தேவங் காந்தி, ககன் கோடா, சரண்தீப் சிங், ஜதின் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.இந்திய ஜூனியர் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.