இந்தியா

1.வங்கதேசம், பாகிஸ்தான், தாய்வான், தென் கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மீது டன் ஒன்றுக்கு கூடுதலாக 118 டாலர் பொருள் குவிப்பு வரி ( ஆன்டி டம்பிங் டூட்டி ) விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2.உணவகங்களில் சேவை கட்டணம் செலுத்துவது கட்டாயம் அல்ல என்று புதிய விதிமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
3.ஏர் இந்தியா விமானங்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகையை பெற நிர்ணையிக்கப்பட்டிருந்த வயது வரம்பு 63-ல் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
4.200 கிலோ வெடிப் பொருளுடன் பாய்ந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணையை இந்திய கடற்படை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.


உலகம்

1.விண்வெளியில் உள்ள ஆய்வு நிலையத்துக்கு தேவையான சரக்குகளை ஏற்றி செல்வதற்காக ’டியான்ஸோ-1’ சரக்கு விண்கலத்தை முதன்முதலாக தயாரித்த சீனா அதை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக புவி தினம் (World Earth Day).
பூமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை உலக மக்கள் உணர வேண்டும் என கேலார்டு நெல்சன் (Gaylord Nelson) என்கிற அமெரிக்கர் கருதினார். இவர் ஊர்வலம், பொதுக்கூட்டம், தர்ணா போன்றவற்றை மாணவர்களைக்கொண்டு நடத்தினார். புவியைப் பாதுகாக்க 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று 2 கோடி பேர் கலந்துகொண்ட பேரணியை நடத்தினார். இதுவே உலக புவி தினமாக மாறியது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு