current-affairs

 

தமிழகம்

1.இன்று சென்னை தினம். சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும்.இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது.கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.பல மாறுதல்களைக் கண்ட சென்னை இன்றுடன் தனது 377வது வயதைக் கொண்டாடியது.

உலகம்

1.சிங்கப்பூர் முன்னாள் அதிபரும்  தமிழருமான எஸ்.ஆர். நாதன் இன்று காலமானார். அவருக்கு வயது 92.இவர் 1999-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இரண்டு முறை அதிபராக பதவி வகித்தார்.

விளையாட்டு

1.இந்த ஆண்டுக்கான விளையாட்டுத் துறை விருது அறிவுக்கப்பட்டுள்ளன. பி.வி. சிந்து (பாட்மிண்டன்), தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்), ஜித்து ராய் (துப்பாக்கிச் சுடுதல்), சாக்‌ஷி மாலிக் (மல்யுத்தம்) ஆகியோருக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ரஜத் செளகான் (வில்வித்தை), லலிதா பாபர் (தடகளம்), செளரவ் கோத்தாரி (பில்லியர்ட்ஸ் & ஸ்னூக்கர்), ஷிவ தாபா (குத்துச்சண்டை), ரஹானே (கிரிக்கெட்), சுப்ரதா பால் (கால்பந்து), ராணி (ஹாக்கி), வி.ஆர். ரகுநாத் (ஹாக்கி), குர்ப்ரீத் சிங் (துப்பாக்கிச் சுடுதல்), அபூர்வி சண்டேலா (துப்பாக்கிச் சுடுதல்), செளம்யாஜித் கோஷ் (டேபிள் டென்னிஸ்), வினேஷ் (மல்யுத்தம்), அமித் குமார் (மல்யுத்தம்), சந்தீப் சிங் மன் (பாரா-தடகளம்), விரேந்தர் சிங் (மல்யுத்தம்) ஆகியோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ரமேஷ் (தடகளம்), சாகர்மால் தயாள் (குத்துச்சண்டை), ராஜ்குமார் சர்மா (கிரிக்கெட்), பிஸ்வேஷ்வர் நந்தி (ஜிம்னாஸ்டிக்ஸ்), பிரதீப் குமார் (நீச்சல்), மகாபிர் சிங் (மல்யுத்தம்) ஆகியோருக்குத் துரோணாச்சாரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியுட்டுள்ள டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி டெஸ்ட் தரவரிசையில் முதன் முதலாக பாகிஸ்தான்(111 புள்ளிகளுடன்) முதல் இடத்தை பிடித்தது.
3.ரியோ ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் முடிவடைந்துள்ளது.பதக்க பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது.ரியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்த அணிகளின் விவரம் வருமாறு.

olympic