இந்தியா

1.2014ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி பரிசு ISRO அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.2015ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி பரிசு ஐ.நா. அகதிகள் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ளது.
2.இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக 30 ஆண்டுகளுக்கு பின் M777 எனும் பீரங்கி வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.இதற்கு முன் போபர்ஸ் பீரங்கி சுவீடன் நாட்டிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது.M777  அமெரிக்காவின் BAE system தயாரிப்பு ஆகும்.
3.பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை பரிசோதிக்க, அந்த உணவை சாப்பிடும் 5 குழந்தைகளின் அம்மாக்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என உத்திரபிரதேச மாநில முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


உலகம்

1.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் (Renewable Energy Country Attractiveness Index (RECAI)) முதலீடுகளை ஈர்ப்பதில் உலகளவில் சீனா முதல் இடத்தை பிடித்துள்ளது.இந்தியா இரண்டாவது இடத்தையும்,அமெரிக்கா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
2.பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவை , மரண தண்டணையில் இருந்து விடுவிக்க சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் ஆஜராகி வாதாடி வருபவர் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஷ் சால்வே ஆவார்.
3.நேபாள் மற்றும் திபெத் எல்லையில் அமைந்துள்ள உலகின் 4வது பெரிய மலைச்சிகரமான Lhotse வை 3 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவின் தேபசிஸ் பிஸ்வாஸ் மற்றும் நியுசிலாந்து நாட்டை சேர்ந்தவரும் மலை உச்சியை அடைந்துள்ளனர்.லோட்சே சிகரத்தின் உயரம் 8516 மீட்டர் ஆகும்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச எய்ட்ஸ் கேண்டில் லைட் நினைவு நாள் (International AIDS Candlelight Memorial Day).
உலகில் தற்போது 33 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி. பாதிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரச்சாரம் உலகில் மிகப்பெரிய பிரச்சாரங்களில் ஒன்றாகும். சமூக விழிப்புணர்வு, சமூகத்தை அணி திரட்டல் போன்ற காரணங்களுக்காக 1983ஆம் ஆண்டு முதல் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 115 நாடுகளில் 1200 சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இதனைக் கடைப்பிடிக்கின்றனர்.
2.உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினம் (World Day for Cultural Diversity for Dialogue and Development).
கலாச்சாரம் என்பது பழங்கால வரலாற்றையும், பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. ஒரு குழுவின், இனத்தின், நாட்டின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள முடிகிறது. ஐ.நா. பொதுச்சபை 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அதன்மூலம் மே 21ஐ உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினமாக அறிவித்தது.
3.கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்ட நாள் 21 மே 1851.
4.முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கு அருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்ட நாள் 21 மே 1991.

 

– தென்னகம்.காம் செய்தி குழு