Daily-Current-Affairs

தமிழகம்

1.காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை 24 மணி நேரத்தில் இணையதளத்தில் தெரிந்துகொள்ள புதுவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதற்காக http://eservices.tnpolice.gov.in என்ற தமிழ்நாடு காவல்துறை வலைதளத்தில் முதல் தகவல் அறிக்கையினை பொது மக்கள் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 14-ம் தேதிக்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2.சமீபத்தில் சென்னை வந்துள்ள மொரிஷியஸ் நாட்டின்  முதல்  பெண் ஜனாதிபதி டாக்டர். பீபி அமீனா பிர்தாஸ் குரீப் பக்கீம் ஆவார்.

இந்தியா

1.ஒடிசா மாநிலத்தில் உள்ள சாந்திப்பூர் பகுதியில் இருந்து ஆயிரம் கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்தபடி பாய்ந்துச் சென்று 350 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்ட பிரித்வி-II ஏவுகணை  இன்று காலை 9.35 மணியளவில் இருமுறை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
2.இந்தியாவிலேயே முதல்முறையாக கடந்த நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடைப்பெற்றது.
3.கர்நாடக அரசுக்கு சொந்தமான மைசூரு பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஷ் நிறுவனம் தேர்தல் மற்றும் வங்கிகளில் பணம் மாற்ற வரும் வாடிக்கையாளர்களின் விரலில் இடப்படும் அழியாத மையை தயாரித்து வழங்குகிறது.
4.இந்தியாவில் பணம் அச்சடிக்கும் இயந்திர தொழிற்சாலைகள் நான்கு இடங்களில் உள்ளன.மகாராஸ்டிராவில் நாசிக் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதிகளில் இரண்டு பணம் அச்சடிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.இதைத் தவிர மைசூர் மற்றும் சல்போனியிலும் ( மே.வங்கம் ) இரண்டு பணம் அச்சடிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.
5.தேசிய சட்ட பணிகள் ஆணைய செயல் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் அவர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

உலகம்

1.ஐ.நா. சபையில் மரண தண்டனையை ரத்து செய்வது தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களித்துள்ளது.தீர்மானத்துக்கு ஆதரவாக 115 வாக்குகளும், எதிராக 38 வாக்குகளும் பதிவாகியுள்ளன.மேலும் நாடுகளின் சட்ட உரிமையை உறுதி செய்வது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகியுள்ளன.
2.பாகிஸ்தான் அரசு தெஹ்ரிக் இ தாலிபானின் கிளை அமைப்பான ஜமாத் உல் அஹர் மற்றும் லஷ்கர் இ ஜாங்வி அல் அலாமி ஆகிய 2 தீவிரவாத குழுக்களுக்கு தடை விதித்துள்ளது.

விளையாட்டு

1.சீன ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனாவின் சன் யூ-வை வீழ்த்திய இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.பி.வி.சிந்து 21-11, 17-21, 21-11 என்ற செட்கணக்கில் சன் யூ-வை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

முக்கிய தினங்கள்/வாரங்கள் 

1.இன்று உலகத் தொலைக்காட்சி தினம் (World Television Day).
உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாச்சாரம் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்வதற்கு இத்தினம் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஐ.நா. சபையானது 1996ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று நவம்பர் 21 ஐ உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது.
2.தேசிய ஒருமைப்பாடு வாரம் நவம்பர் 19 முதல் நவம்பர்  25 வரை கடைபிடிக்கப்படுகிறது.
நவம்பர் 19 – 25 வரை ஒவ்வொரு நாளும் சிறப்பு குறியீடாக அடையாள படுத்தப்பட்டுள்ளது.
● நவம்பர் 19 – தேசிய ஒருமைப்பாடு தினம்
● நவம்பர் 20 – சிறுபான்மையினர் நல்வாழ்வு தினம் ( Welfare of Minorities Day )
● நவம்பர் 21 – மொழி நல்லிணக்க நாள் ( Linguistic Harmony Day )
● நவம்பர் 22 – நலிந்த பிரிவினர் தினம் ( Weaker Sections Day )
● நவம்பர் 23 – கலாச்சார ஒற்றுமை தினம் ( Cultural Unity Day )
● நவம்பர் 24 – பெண்கள் தினம் ( Women’s Day )
● நவம்பர் 25 – சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் ( Conservation Day )
3.இன்று பங்களாதேஷ்  இராணுவத்தினர் நாள் கொண்டாடப்படுகிறது.
4.இன்று  நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் சர்.சி.வி.இராமன் மறைந்த தினம்.இவர் மறைந்த தேதி 21 நவம்பர் 1970.
5.21 நவம்பர் 1947-ம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. “ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா.
6.புலிகளின் குரல் வானொலி தொடங்கப்பட்ட நாள் 21 நவம்பர் 1990.