தமிழகம்

1.கோவில், மசூதி, தேவாலயம் போன்ற வழிபாட்டு இடங்களில் பிராத்தனை தவிர்த்து கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட வேறு எவ்வித நடவடிக்கைகளிலு ஈடுபடக்கூடாது என்றும் அவ்வாறு ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்தியா

1.டாடாடா குழுமத்தைச் சேர்ந்த 6 நிறுவனங்களின் இயக்குநர் பதவியை சைரஸ் மிஸ்திரி ராஜினாமா செய்துள்ளார்.
2.மத்திய அரசு விரைவில் ‘டிஜிட்டல்’ கிராமம் திட்டத்தை தொடங்க உள்ளது.முதல் கட்டமாக 100 கிராமங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
3.வாட்ஸ் அப் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் பதிவிடும் போஸ்டுகளுக்கு குழு நிர்வாகி பொறுப்பாக முடியாது என்றும் அவ்வாறு பதிவு செய்யும் போஸ்டுகளுக்கு குழு நிர்வாகி மீது அவதூறு வழக்குத் தொடர முடியாது என்றும் தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
4.உத்ரகாண்ட் மாநில முதல்-மந்திரி ஹரிஷ் ராவத் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை மற்றும் திருவள்ளுவர் பூங்காவை திறந்து வைத்தார்.
5.சிறுபான்மை இன மக்கள் பணமில்லா வர்த்தக நடைமுறையை அறிந்து கொள்வதற்கும் அதனை எளிய முறையில் நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு Cashless chaupals என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
6.பீகார் மாநில கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இலவச WiFi வசதி ஏற்படுத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
7.ரத்தன் டாடா , முகேஷ் அம்பானி,பில் கேட்ஸ் உள்ளிட்ட பல உலக மெகா கோடிசுவரர்கள் இணைந்து 1 மில்லியன் டாலர் தொகை தூய்மை எரிசக்தி நிதியத்தை உருவாக்கி உள்ளனர். இதற்கு Breakthrough Energy Ventures என பெயரிட்டுள்ளனர்.


உலகம்

1.குழந்தைகளை தாக்கும் down syndrome பற்றிய ஓனிர் ( Onir ) இயக்கிய The Raising Bar என்ற ஆவணப்படம் Hollywood International Independent Documentary Award-யை கைப்பறியுள்ளது.
2.கனடா நாட்டின் ரூபாய் நோட்டுகளில் முதன்முறையாக பெண் ஒருவரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.அவர் வயோலா டெஸ்மண்ட் ( Viola Desmond ) என்ற கருப்பின சமூக உரிமைகள் இயக்கத்தின் தலைவர் ( Black Civil Rights Leader ) ஆவார்.


விளையாட்டு

1.இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியின் இந்தியாவின் கருண்நாயர்  303 ரன்கள் எடுத்து  கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதன் மூலம் தனது 25 வயது 10 நாட்களில் டிரிபிள் சதத்தை எடுத்தார். டெஸ்டில் குறைந்த வயதில் டிரிபிள் சதத்தை எடுத்த 6-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.இதற்கு முன்பு சோபர்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) 21 வயது 213 நாட்களிலும், பிராட்மேன் (ஆஸ்திரேலியா) 21 வயது 318 நாட்களிலும், ஹட்டன் (இங்கிலாந்து) 22 வயது 58 நாட்களிலும், ஹனீப் முகமது (பாகிஸ்தான்) 23 வயது 27 நாட்களிலும், லாரா (வெஸ்ட்இண்டீஸ்) 23 வயது 10 நாட்களிலும் டிரிபிள் சதம் எடுத்திருந்தனர்.
2.இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னையில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி டெஸ்ட்  கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 4-0  என்ற கணக்கில் கைப்பற்றியது.கருண் நாயர் ஆட்ட நாயகன் விருதையும், விராட் கோலி தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினர்.மேலும் இந்த வெற்றியின் மூலம் 18 போட்டிகளில் தோல்விகளை சந்திக்காத கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி  பெற்றுள்ளார்.


இன்றைய தினம்

1.உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி “நியூயோர்க் வேர்ல்ட்” பத்திரிகையில் வெளியான நாள் 21 டிசம்பர் 1913.
2. உலகின் முதலாவது இருதயமாற்றுச் சிகிச்சை பெற்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் நாஷ்கான்ஸ்கி சிகிச்சை பெற்று 18 நாட்களின் பின்னர் இறந்த நாள் 21 டிசம்பர் 1967.

 

– தென்னகம்.காம் செய்தி குழு