இந்தியா

1.இந்தியாவின் 14வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்ப்ட்டுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மீராகுமாரை விட 4 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.இவர் வரும் 25-ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
2.நேபாளம் மற்றும் பூடான் நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அடையாள அட்டையாக பாஸ்போட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 15 வயதுக்குட்பட்டவர்கள் பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுகள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளைப் பயணத்துக்கான ஆவணமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற முதலாவது உலகளாவிய ‘ரோபாட்டிக்ஸ்’ போட்டியில், மும்பையை சேர்ந்த மாணவர்கள் குழு தங்கப்பதக்கத்துடன் கூடிய ஜாங் ஹெங் என்ஜினீயரிங் டிசைன் விருது (Zhang Heng Engineering Design Award) மற்றும் உலகளாவிய சவால் மேட்ச் பிரிவில் (Global Challenge Match) வெண்கலமும் வென்றுள்ளனர்.


விளையாட்டு

1.பஹாமஸ் நாட்டில் நடைபெற்று வரும் இளைஞர் காமன்வெல்த் போட்டியின் ஜூடோ விளையாட்டில் , ஹரியானாவின் சோனி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அன்டிம் யாதவ் , மணிப்பூரின் ரெபினா தேவி மற்றும் ஆஷிஸ் ஆகியோர் வெண்கலம் பதக்கத்தை வென்றுள்ளனர்.


இன்றைய தினம்

1.1969 – நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்டிரின் ஆகியோர் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்.
2.2007 – ஹரி பொட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது.

– தென்னகம்.காம் செய்தி குழு