தமிழகம்

1.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் 11வது தேசிய நெல் திருவிழா ஜூன் 17ல் தொடங்கியது.
2.தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சி.நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.


இந்தியா

1.மூன்றாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தலைமையில் 55,000 நபர்கள் லக்னோவில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
2.பெங்களூருவில் நாகச்சந்திரா – எலச்சனஹள்ளி இடையிலான 24.2 கி.மீ. தூரமுள்ள பசுமை பாதை மெட்ரோ ரயில் சேவையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி துவக்கி வைத்துள்ளார்.
3.பீகாரில் அமைந்துள்ள நாளந்தா பல்கலைக்கழகம், தென்கொரியாவின் Academy of South Korean Studies உடன் கல்விசார் மேம்பாடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
4.Queen of Dhwayah – 2017 என்னும் பெயரில் கேரளாவில் (நெடும்பசேரி, எர்ணாகுளம்) நடைபெற்ற, முதலாவது திருநங்கையர் அழகிப்போட்டியில் Shyama என்பவர் மகுடம் சூடி உள்ளார்.
5.புனேவை சேர்ந்த Sarhad என்ற அமைப்பின் சார்பில் வழங்கப்படும் 5வது பூபேன் ஹசாரிகா தேசிய விருது, அருணாச்சலப் பிரதேசத்தை சார்ந்த எழுத்தாளர் Yeshe Dorjee Thongchi க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.2017 அக்டோபரில், ஜெர்மனியின் Cologne நகரில் நடைபெறவுள்ள உலகின் மிகப்பெரிய உணவு மற்றும் குளிர்பானங்கள் கண்காட்சி ANUGA – 2017வின் துணை உறுப்பு நாடாக பணியாற்ற இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
2.G – 7 நாடுகளின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்கள் மாநாடு, ஜூன் 11 & 12ல் இத்தாலியின் Bologna நகரில் நடைபெற்று முடிந்துள்ளது.
3.The World Summit on the Information Society (WSIS) Forum 2017 என்னும் மாநாடு, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஜூன் 12 -16 நடைபெற்று முடிந்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக இசை தினம் (World Music Day).
மொழி தெரியாதவர்களையும் ஒன்று சேர்க்கும் சக்தி இசைக்கு உண்டு. ஆகவே இசையை ஒரு உலக மொழி என்கின்றனர். இசையே நாட்டியத்திற்கு அடிப்படை. மனிதர்கள் அனைவரையும் ஆட்டி வைப்பது இசை. இசையை ரசிக்காதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள இசையமைப்பாளர்கள் 1982ஆம் ஆண்டு ஜூன் 21 அன்று பிரான்சில் கூடினர். அந்த நாளையே உலக இசை நாளாக அறிவித்தனர்.
2.இன்று உலக யோகா தினம் (World Yoga Day).
யோகா என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு கலையாகும். யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன. உடலையும், உள்ளத்தையும் நலத்துடன் வைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் கலை. சர்வதேச யோகா கூட்டமைப்பு 1987ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு உலக யோகா தினத்தைக் கொண்டாடி வருகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு