தமிழகம்

1.ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் தனக்கு வழங்கப்பட்ட யுவபுரஸ்கார் விருதினை திரும்பி தந்துள்ளார்.கானகன் என்ற நூலுக்காக, இவருக்கு  யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
2.ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பிறப்பித்துள்ளார்.


இந்தியா

1.கேரளத்தில் தெரு நாய்களால் மனித உயிர்கள் பலியாகும் விவகாரம் தொடர்பாக விசாரிக்க கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஸ்ரீ ஜெகன் தலைமையில் ஒரு குழு உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ளது.
2.பிளாஸ்டிக் இல்லா மாநிலத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பால்பாயிண்ட் பேனாக்களை உபயோகிப்பதை தவிர்த்து மை பேனாக்களை உபயோகிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது.
3.பழைய ரூ500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற இந்திய அரசு அறிவித்தன் எதிரொலியாக நேபாளத்தில் கடும் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.சில்லரை தட்டுப்பாட்டை சமாளிக்க நேபாள நாட்டிற்கு ரூ.100 கோடி மதிப்புள்ள ரூ.100 நோட்டுகளை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
4.ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டையும் சேர்த்து ஒருங்கிணைந்த பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வகையில், அரசு விதிகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
5.கூட்டுறவு வங்கிகளில் கணக்கில் காட்டாத கருப்பு பணத்தை டெபாசிட் செய்வதற்கு மத்திய அரசுதடை விதித்துள்ளது.


உலகம்

1.பூமியில் அழிந்து போன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவதற்கு குறைந்தபட்சம் 80 லட்சம் ஆண்டுகள் ஆகும் என்று அமெரிக்காவில் உள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராக நேற்று பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
3.அமெரிக்காவில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கொண்டு வந்த ‘ஒபாமா கேர்’ இன்சூரன்சு திட்டத்தை முடக்குகின்ற வகையில் தயாரிக்கப்பட்ட உத்தரவில் டொனால்டு டிரம்ப் முதல் கையெழுத்துதிட்டுள்ளார்.மேலும் இதை விட மிக சிறப்பான இன்சூரன்ஸ் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.சர்வதேச கால்பந்து சங்கங்கள் சம்மேளனத்தின் (ஃபிஃபா) நிதிக் குழு உறுப்பினராக, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎஃப்எஃப்) தலைவர் பிரஃபுல் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இந்த பொறுப்பில் 4 ஆண்டுகள் பதவி வகிப்பார்.


இன்றைய தினம்

1.இன்று லெனின் நினைவு தினம் (Lenin Death Anniversary Day).
லெனினை உலகப் புரட்சியாளர் என்று அழைக்கிறார்கள். ரஷ்யப் புரட்சிக்கு தலைமை ஏற்று நடத்தியவர். ரஷ்யாவில் பொதுவுடமை அரசை நிறுவினார். சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபராக பதவி வகித்தார். இவர் சோவியத் மார்க்சியம் – லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டினை உருவாக்கினார். சமூகப் புரட்சியாளர் லெனின் 1924ஆம் ஆண்டு ஜனவரி 21 இல் இயற்கை எய்தினார்.
2.மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமான நாள் 21 ஜனவரி 1960.
3.திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியவை இந்தியாவின் தனி மாநிலங்களான நாள்  21 ஜனவரி 1972.
4.முதலாவது சிங்களத் திரைப்படம் திரையிடப்பட்ட நாள் 21 ஜனவரி 1947.
5.உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்ட நாள் 21 ஜனவரி 1954.

 

– தென்னகம்.காம் செய்தி குழு