current-affairs

தமிழகம்

1.இன்று சென்னை விமான நிலையம் – சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா  தொடங்கி வைத்துள்ளார். மேலும்  விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லுார் சாலை, கிண்டி, பரங்கிமலை மற்றும்  சின்னமலை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா  திறந்து வைத்துள்ளார்.

இந்தியா

1.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொழிலாளர்களுக்காக ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற புதிய  திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ. 330 பிரிமியம் செலுத்தினால்,ரூ. 2 லட்சம் வரை தொழிலாளர்களுக்கு காப்பீட்டை அளிக்கிறது.வரன்முறைப்படுத்தப் படாத பிரிவில் வரும் தொழிலாளர்களே இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவர்.பயனாளிகளுக்கு வயது  18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
2.சர்வதேச அளவில்  புகழ்பெற்ற கோல்டன் க்ளோப் விருதுக்கான இறுதிப்பட்டியலில் இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ள ‘சில சமயங்களில்’ தமிழ் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இறுதிப்பட்டியலுக்கு மொத்தம் 10 படங்கள் தேர்வாகியுள்ளன.இதில் ‘சில சமயங்களில்’ திரைப்படமும் அடங்கும்.இந்த இறுதிப் பட்டியலில் இருந்து 5 திரைப்படங்கள் விருதுக்கு தேர்வு செய்யப்படும்.

உலகம்

1.இன்று உலக அமைதி தினம் (World Peace Day).

ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் உலக அமைதி நாள் அனைத்து ஐ.நா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நாள் முன்னர் 1981இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும் 2002ல் இருந்து ஆண்டு தோறும் செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது.
2.சமீபத்தில் நியூயார்க் நகரத்தில் அமெரிக்க நாடக ஆசிரியர் எட்வர்டு ஆல்பி காலமானார்.இவர் “Who’s Afraid of Virginia Woolf ?” என்ற நாடகத்தை எழுதியுள்ளார்.இவர் A Delicate Balance, Seascape,Three Tall Women ஆகியவற்றுக்கு  3 முறை புலிட்சர் பரிசு பெற்றுள்ளார்.இவர் அமெரிக்காவின் மிகப்பெரிய வாழும் நாடக ஆசிரியராக கருதப்பட்டவர் ஆவார்.
3.சமீபத்தில் சீனாவின் புஜியான் மாகாணத்தில் ஜியாமென் பகுதியில் மணிக்கு 230 கி.மீ. முதல் 280 கிமீ காற்று வேகத்தில் மெரான்டி சூறாவளி (பிலிப்பைன்ஸ்சில் Ferdie என அழைக்கப்படும்) தாக்கியது.இது 2016-ல் உலகின் வலிமையான சூறாவளி ஆகும்.
4.புர்ஜ் கலிஃபா கட்டிட அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாள் 21 செப்டம்பர் 2004.

விளையாட்டு

1.கால்பந்து கிளப் அணிகளில் தொடர்ச்சியாக 16 வெற்றிகள் பெற்று பார்சிலோனா அணி சாதனை படைத்திருந்தது.தற்பொழுது அந்த சாதனையை  ரியல் மாட்ரிட் அணி சமன் செய்துள்ளது.இந்த இரு அணிகளும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அணிகளாகும்.