தமிழகம்

1.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி.) ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான  ராஜாராம், கிருஷ்ணகுமார், சுப்ரமணியன், சுப்பையா மற்றும் பாலுச்சாமி ஆகிய ஐந்து உறுப்பினர்களை நியமனம் செய்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2.நாட்டின் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் தகவல் மையம் என்ற விருது தமிழக அரசின் சுற்றுச்சூழல் தகவல் மையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.கடந்த நிதி ஆண்டில் அதிகம் விற்பனையான கார்களில் மாருதி நிறுவனத்தின் ஆல்டோ முதல் இடத்தை பிடித்துள்ளது.இந்த கார் தொடர்ந்து 13-வது ஆண்டாக முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
2.சீனாவைச் சேர்ந்த தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ஹூவெய் நிறுவனம் இந்தியாவில் தனது சேவைகளை விரிவுபடுத்த வசதியாக ரெடிங்டன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
3.இந்தியாவில் மிகப்பெரிய ஜவுளிதுறை கண்காட்சியை மத்திய அரசு வரும் ஜூன் 30ம் தேதி காந்திநகரில் நடத்த உள்ளது.இந்த கண்காட்சியை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.இந்த தகவலை ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.


உலகம்

1.அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பு விழாவுக்காக ரூ.706 கோடி நன்கொடை திரட்டி புதிய சாதனை புரிந்துள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்.இவர் மறைந்த தேதி 21 ஏப்ரல் 1964.
2.இலங்கையில் அமெரிக்க மிசனறிகள் ஒன்றுகூடி முதன் முதலில் ஒரு திருச்சபையை ஆரம்பித்த நாள் 21 ஏப்ரல் 1916.
3.பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்த நாள் 21 ஏப்ரல் 1944.
4.பிரசீலியா பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 1960.
5.சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பதை முதன் முதலில் வானியலாளர் அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் அறிவித்த நாள் 21 ஏப்ரல் 1994.

 

– தென்னகம்.காம் செய்தி குழு