current_affairs

இந்தியா

1.பாதர ஸ்டேட் வங்கி நாடு முழுவதும் ஒரே நாளில் சுமார் 6 லட்சம் டெபிட் ஏடிஎம் கார்டுகளை முடக்கியுள்ளது.நாடு முழுவதும் உள்ள பல பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் மையங்களின் பரிவர்த்தனைகளில், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
2.தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாட்டில் வாக்குப் பதிவை கட்டாயமாக்குவது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று அறிவித்துள்ளார்.
3.வழக்குரைஞர்களின் சான்றிதழ்களை வரும் ஜனவரி மாதம் 31-ஆம் தேதிக்குள் சட்டப் பல்கலைக்கழகங்கள் சரிபார்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
4.நாடுமுழுவதும் காவலர்கள் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.பணியின் போது உயிர் நீத்த காவலர்களின் நினைவாக இந்த வீர வணக்கம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

உலகம்

1.ரஷ்யா இரண்டாவதாக ஓர் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்க  ஒப்புக் கொண்டுள்ளது.
2.இந்தியா, மியான்மர் இடையே பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக, 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
3.அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஆப்பிள்’ நிறுவனத்துக்கு அயர்லாந்து நாட்டின் மிகக் குறைவான வரிவிதிப்புக் கொள்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி தொடர்பான கொள்கையை மீறியிருப்பதால் ஐரோப்பிய ஒன்றியம் 13 பில்லியன் ஈரோ அபராதம் விதித்துள்ளது.
4.சவுதி அரேபியாவில் வாலிபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக அரசு குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.அரேபிய அரசராக இருப்பவர் கிங் சல்மான்.இவர் தனது பேரனின் தலையை துண்டிக்க உத்தரவிட்டு, உலக மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
5.இன்று உலக அயோடின் தினம் (Global Iodine Day).
அயோடின் பற்றாக்குறை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. அயோடின் சத்துக் குறைபாட்டால் இனம் வயதினரின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். பெரியவர்க்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும். எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினைப் பயன்படுத்த வேண்டும்.ஆண்டுதோறும் உலக அயோடின் தினம் அக்டோபர் 21ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
6.இன்று ஊர்வன விழிப்புணர்வு தினம்.(NATIONAL REPTILE AWARENESS DAY).
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் தேதி இத்தினம்  கொண்டாடப்படுகிறது.

விளையாட்டு

1.ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷண் வழங்கக் கோரி ஆந்திர மாநில அரசு மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளது.
2.இந்திய கால்பந்து வீராங்கனை பூனம் சவுகான் (29) டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

26.இன்று நீலகிரி மாவட்டம்.

இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது. இதன் தலைநகர் உதகமண்டலம் ஆகும். இங்குள்ள உயரமான மலைமுடி தொட்டபெட்டா ஆகும். குன்னூர், கோத்தகிரி, கூடலூர், அரவங்காடு ஆகியன இம்மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர்கள்.
நீலகிரி மாவட்டம் மலைகளின் ராணி ஊட்டியை தலைநகரமாக கொண்டு நீலகிரி மாவட்டம் செயல்பட்டு வருகிறது. ஊட்டியை தவிர குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகள் நீலகிரி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன.
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், உயிர்க்கோள் காப்பகமாக ஐக்கிய நாடுகள் சபை ‛UNESCO’ அறிவித்துள்ளது நீலகிரிக்கு பெருமை சேர்க்கிறது. இது இந்தியாவின் முதல் உயிர்க்கோள் காப்பகமாகும்.
கூடலூர் கிழார், கூடலூர்ப் பல்கண்ணனார் ஆகிய சங்ககாலப் புலவர்கள் இவ்வூரில் வாழ்ந்தவர்கள்.