இந்தியா

1.நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் தூய்மையான ரயில் நிலையங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.விசாகப்பட்டினம் ரயில் நிலையம் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.செகந்திராபாத் இரண்டாவது இடத்தையும்,ஜம்மு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.தமிழகத்தை பொறுத்தவரை முதல் 25 இடங்களில் ஒன்றுகூட இடம் பெறவில்லை.கும்பகோணம் 40-வது இடத்திலும், கோவில்பட்டி 41-வது இடத்திலும், மேட்டுப்பாளையம் 42-வது இடத்திலும், சேலம் 43-வது இடத்திலும் சென்னை 184-வது இடத்தையும் பிடித்துள்ளன.இந்தியாவின் தரக் கவுன்சில் இந்த ஆய்வை மேற்கொண்டது.
2.மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி பகுதியைச் சேர்ந்த அனில் மாதவ் தவே காலமானதையடுத்து அவர் வசம் இருந்த சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டடுள்ளது.


உலகம்

1.இந்திய கடற்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் ரோன்னி ஆப்ரஹாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.மேலும் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பாகிஸ்தான் தண்டனையை நிறைவேற்றக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
2.இந்தியா, சிங்கப்பூர் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும் 24வது  கடற்படை பயிற்சி Singapore – India Maritime Bilateral Exercise (SIMBEX 2017) மே 18 முதல் மே 24 வரை தென் சீன கடல் பகுதியில் நடைபெறுகிறது.
3.பருவகால மாற்றம் குறித்த ஐ.நா. அமைப்பிற்கு [United Nations Framework Convention on Climate Change UNFCCC], இந்திய அதிகாரி ஓவைஸ் சர்மாட் (Ovais Sarmad) என்பவரை துணை நிர்வாக செயலாளராக (Deputy executive secretary) ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்துள்ளார்.


இன்றைய தினம்

1.உலகின் முதலாவது நவீன நிலவரையை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்த நாள் 20 மே 1570.
2.யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்த நாள் 20 மே 1869.
3.எயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்ட நாள் 20 மே 1983.
4.புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்ட நாள் 20 மே 1999.

– தென்னகம்.காம் செய்தி குழு