தமிழகம்

1.கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் மாரடைப்பால் கடந்த மார்ச் 18-ஆம் தேதி இரவு லண்டனில் உயிரிழந்தார்.
2.அதிமுக செய்தித் தொடர்பாளராக வா.புகழேந்தி நியமிக்கப்படுவதாக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்


இந்தியா

1.உத்தரப்பிரதேச மாநிலத்தின் 21-வது முதல்வராக பாஜக-வின் யோகி ஆதித்யநாத் நேற்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ராம் நாயக் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க. தலைவர் கே.பிரசாத் மவுரியா, மற்றும் லக்னோ நகர மேயர் தினேஷ்சர்மா ஆகிய இருவரும் துணை முதல்வராக பதவியேற்றுள்ளனர். மேலும் 47 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
2.பிஹார் மாநிலத்தில் உள்ள நாளந்தா திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 97 வயதில் எம்ஏ படிக்கும் முதியவர் ராஜ்குமார் வைஷ்யா, நாட்டிலேயே மிக வயதான மாணவர் என்று லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
3.கோவாவில் பாஜக அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க கடந்த மார்ச் 16-ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றுள்ளார்.
4.ஒடிசா ஜன மோர்ச்சா இயக்கத் தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான பியாரிமோகன் மோகபத்ரா (77), மும்பையில் நேற்று இரவு காலமானார்.


உலகம்

1.அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரின் பொதுப்பணி மற்றும் பொறியியல் துறையின் புதிய இயக்குநராக இந்திய பொறியாளர் கருண் ஸ்ரீராமா நியமிக்கப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச மகிழ்ச்சி தினம் (International Day of Happiness).
மகிழ்ச்சி எது எனக் கேட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கூறுவார்கள். போரையும், வறுமையையும் உலகளவில் முடிவுக்குக் கொண்டுவருவதே மகிழ்ச்சி என ஐ.நா. சபை கருதுகிறது. மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படை லட்சியம் என்கிற அடிப்படையில் ஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஐ சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது.
2.இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் (World Sparrow Day).
நவீன கட்டிட அமைப்பானது சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. இதுதவிர தெருக்களில் சிட்டுக்குருவிகளுக்குத் தேவையான தானியங்கள் கிடைப்பதில்லை. விவசாய நிலங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் அடிக்கப்படுகின்றன. நிலம், நீர் மாசுகாரணமாகவும், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. ஆகவே, சிட்டுக்குருவிகள் மீது விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
3.டச்சு கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்ட நாள் 20 மார்ச் 1602.
4.அல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியற் கோட்பாட்டை வெளியிட்ட நாள் 20 மார்ச் 1916.

 

– தென்னகம்.காம் செய்தி குழு