தமிழகம்

1.கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை  நிரூபித்தார்.இந்த நிகழ்வு கடந்த 1988-ம் ஆண்டு அதிமுக 2 அணிகளாகப் பிளவுபட்டபோது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற பலப்பரீட்சைக்கு பிறகு அதாவது 29 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெற்றது.


இந்தியா

1.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற அல்டமாஸ் கபிர் (68), கொல்கத்தாவில் நேற்று  காலமானார்.இவர் மேற்கு வங்காள மாநில தலைநகரான கொல்கத்தாவில் 19-7-1948 அன்று பிறந்தார்.
2.பள்ளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த திட்டத்தின் மூலம் உதவித் தொகையை பெற விரும்பும் மாணவர்கள்  வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் தங்களின் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
3.கல்விக்கடன் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களின் வசதிக்காக மத்திய அரசு வித்யா லட்சுமி போர்ட்டல் எனப்படும் இணையதளத்தை ஏற்படுத்தி உள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
4.உத்திர பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்டமாக 69 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடைபெற்றது.இதில் 61.16 சதவீத வாக்குகள் பதிவாயின.


வர்த்தகம்

1.இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய தலைவராக டிசிஏ ரங்கநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.


உலகம்

1.அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் கட்டி வருகின்றன.அங்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் 3 வீரர்கள் சென்று தங்கி பணிபுரிகின்றனர்.அங்கு தங்கி பணிபுரியும் வீரர்களின் உணவுக்காக சில காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. அவ்வகையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கி விட்சன் என்பவர் தொக்யோ பெகானா என அழைக்கப்படும் சீன முட்டை கோசை பயிரிட்டிருந்தார்.இந்த முட்டைகோஸ் சமீபத்தில் அறுவடை செய்யப்பட்டது.இதன் மூலம் சீன முட்டை கோஸ் விண்வெளியில் பயிரிடப்பட்டுள்ள 5-வது பயிர் என்ற பெருமையை பெற்றுள்ளது.இந்த தகவலை நாசா விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.


விளையாட்டு

1.ஐ.பி.எல் தொடரில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டுள்ளார்.இவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலக சமூக நீதி தினம் (World Day of Social Justice).
உலகம் முழுவதும் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையே மிகப்பெரிய இடைவெளி அதிகமாகிக்கொண்டே வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் கண்ணியமான வேலைகளை அனைவருக்கும் வழங்கி மனித வளத்தை மேம்படுத்த வேண்டும். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நியாயங்களை கேட்டு அவர்களுக்கு சமூக நீதி கிடைத்திட வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் 2007ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
2.ஆறாம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடிய நாள் 20 பிப்ரவரி 1547.
3.அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகிய நாள் 20 பிப்ரவரி 1987.

 

– தென்னகம்.காம் செய்தி குழு