Current-Affairs-Updates

தமிழகம்

1.கன்னியாகுமரி மாவட்டம், ஆறுதேசத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி செல்லப்பன் பத்மநாபன் வேளாண் ஆராய்ச்சியில் சாதனை புரிந்ததற்காக அமெரிக்காவில் தேசிய விருது வழங்கப்பட்டு உள்ளது.மேலும் இந்தியர் ஒருவர் வேளாண் ஆராய்ச்சிக்காக அமெரிக்க தேசிய விருது பெறுவது இதுவே முதன்முறையாகும்.
2.வெளிநாட்டினர் தங்கள் நாட்டுப் பணத்தை இந்திய ரூபாய்க்கு மாற்றிக் கொள்ள வசதியாக அன்னியச் செலாவணி சிறப்பு கவுன்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியா

1.காஷ்மீர் பள்ளத்தாக்கில் போஸ்ட் பெய்டு செல்பேசி இணைய சேவைகளுக்கான தடை நீக்கப்பட்டு நேற்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கின.

உலகம்

1.நியூயார்க்கில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பை கடந்த நவம்பர் 17-ம் தேதி சந்தித்துப் பேசினார்.மேலும் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதும் அவரை சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் ஷின்ஸோ அபேவாகும்.
2.லத்தீன் கிராமி விருதுகளை மெக்சிகன் பாடகரும், நடிகருமான Juan Gabriel  வென்றுள்ளார்.இந்த விருது அவரது மரணத்திற்கு பிறகு வழங்கப்பட்டுள்ளது.இவர் மூன்று லத்தீன் கிராமி விருதுகளை வென்றுள்ளார். “Los Duo 2” என்ற ஆல்பத்திற்காக இவ்விருதுகள் அவருக்கு வழங்கப்படுள்ளன.மேலும் கொலம்பியாவைச் சேர்ந்த ஷகிரா, கார்லோஸ் வைவ்ஸ் ஆகியோர்  “La Bicicleta” என்ற ஆல்பத்திற்காக இவ்விருதுகளை வென்றுள்ளனர்.மெக்சிகோ சகோதரர்கள், Jesse மற்றும் Joy ஆகியோரின் “Un Besito Mas” என்ற ஆல்பம் சிறந்த சமகால பாப் ஆல்பத்திற்கான லத்தின் கிராமி விருதை தட்டிச் சென்றுள்ளது.
3.உலகின் முதல் செயற்கை இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட டென்டன் கூலி (96), அமெரிக்காவில் காலமானார்.
4.ஆசிய – பசுபிக் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபராக தனது கடைசி சுற்றுப்பயணமாக பெரு நாட்டுக்குச் சென்றுள்ளார் பாரக் ஒபாமா.
5.அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜூலியன்ஸ் ஏல நிறுவனத்தில் மறைந்த ஹாலிவுட் நடிகை மெர்லின் மன்ரோ அணிந்த கவுன் உடை ரூ.32 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
6.இன்று ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினம் (Africa Industrialization Day).
ஆப்பிரிக்கா இயற்கை வளம் நிறைந்த நாடு. கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள் நிறைந்த நாடு. ஆனால் தொழில் வளர்ச்சி ஏற்படாததால் பஞ்சம், பசி, பட்டினி போன்றவை நிரந்தரமானதாக உள்ளது. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், வன்முறை, உணவுப் பஞ்சம் போன்ற மிகப் பெரிய சவால்கள் உள்ளன. ஆகவே ஆப்பிரிக்காவின்மீது ஐ.நா. தனிக்கவனம் செலுத்தி நவம்பர் 20ஐ ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினமாக அறிவித்தது.
7.இன்று சர்வதேசக் குழந்தைகள் தினம் (Universal Children’s Day).
ஐ.நா. பொதுச்சபை குழந்தைகளின் நலனையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் 1954ஆம் ஆண்டில் குழந்தை உரிமைகள் சட்டத்தைக் கொண்டுவந்தது. வறுமை, எட்ய்ஸ் போக்கவும், குழந்தைகளுக்கு வராமல் தடுக்கவும், யுனிசெஃப் முயன்று வருகிறது. குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க ஐ.நா. சபை 1954ஆம் ஆண்டில் நவம்பர் 20ஐ சர்வதேசக் குழந்தைகள் தினமாக அறிவித்தது.