தமிழகம்

1.திருவண்ணாமலையில், 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்டுள்ள கார்த்திகை மகா தீபத்தை வருகிற 23ஆம் தேதி அதிகாலை வரை பக்தர்கள் தரிசித்துக் செல்லலாம்.மேலும் 35 கி.மீ. தொலைவு சுற்றளவுக்கு இந்த மகா தீபத்தை காண முடிகிறது.


இந்தியா

1.அஸ்ஸாம் மாநில அரசு இந்தியாவின் முதல் தீவு மாவட்டமான மஜூலியை 2020க்குள் கார்பன் சமநிலை மாவட்டமாக உருவாக்க முடிவு செய்துள்ளது.
2.ஆந்திர மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்கு செல்லிடப்பேசியை கொண்டுவர  முதல்வர் சந்திரபாபு நாயுடு  தடை விதித்துள்ளார்.
3.பெங்களூரு இலக்கியத்திருவிழாவில் 2016-ஆம் ஆண்டுக்கான இலக்கியத் திருவிழா விருதுக்கு இலக்கியவாதிகள் பெருமாள் முருகன், கே.வி.திருமல்லேஷ், வினய்சீத்தாபதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இதில் பெருமாள் முருகன் தமிழ் எழுத்தாளர் ஆவார்.இவர் எழுதிய பைய்ர் ஆங்கில நூலுக்கு இவ்விருது கிடைத்துள்ளது.
4.உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற குழுவிடம் வரும் 22-ஆம் தேதி விளக்கம் அளிக்க உள்ளார் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல்.
5.சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக ஜெகதீஸ் சிங் ஹேகரை நியமிக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.இவர் 44வது தலைமை நீதிபதியாக வருகிற ஜனவரி 4ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
6.இந்தியாவின் முதல் “இந்திய திறன் கழகத்தை”  உத்திர பிரதேசத்தின் கான்பூரில் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.மேலும் இந்த அமைப்பானது மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சரகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய தொழில் நுட்ப கழகத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.
7.அஸ்ஸாம் மாநிலத்தின் சுற்றுலாத்துறையின் தூதுவராக பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
8.கிராமப்புறங்களில் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு கல்வியை ஏற்படுத்த மத்திய ஆயுஷ் (ayush ) துறை ஸ்வத்யா ரக் ஷா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ( A – ஆயுர்வேதம் , Y – யோகா , U – யுனானி , S – சித்தா, H – ஹோமியோபதி ) என்பது இதன் விரிவாக்கமாகும்.


உலகம்

1.உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன் எழுதிய புத்தகத்தின் பிரதி 37 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ. 25 கோடி) கிறிஸ்டீஸ் நியூயார்க் ஏல விற்பனை நிலையத்தில் ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
2.பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களை திரையிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நேற்று முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
3.அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள அக்சான்ஹில் நகரில் நடைபெற்ற ‘மிஸ்வேர்ல்டு 2016’ உலக அழகிப்போட்டியில் போர்ட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த  ஸ்டெபானி டெல்வாலே என்ற 19 வயது இளம்பெண் ‘மிஸ்வேர்ல்டு 2016’  பட்டத்தை வென்றுள்ளார்.இப்போட்டியில் இரண்டாவது இடத்தை டொமினிகள் குடியரசு நாட்டைசேர்ந்த யரீட்ஷா மிகுலெனினா ரெயஸ் ரமிரெஷ் மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த நடாஷா மனுலாவும் வென்றுள்ளனர்.இந்தியா சார்பில் இந்த போட்டியில் பங்கேற்ற பிரியதர்ஷினி சாட்டர்ஜி 16வது இடத்தையே பிடிக்க முடிந்தது.


விளையாட்டு

1.ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.இந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம்  6-வது நபராக களம் இறங்கி 9 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை  பாகிஸ்தான் அணியின் ஆசாத் ஷபிக் பெற்றுள்ளார். இதற்கு முன் கேரி சோபர்ஸ் 8 சதங்கள் அடித்ததே அதிகபட்ச சதமாக இருந்தது.
2.இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கொச்சியில் நடைபெற்றது.இந்த போட்டியில் பெனால்டி சூட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் (International Human Solidarity Day).
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 20இல் உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு நிதியை நிறுவியது. வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது மற்றும் மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதே இதன் நோக்கமாகும். 21ஆம் நூற்றாண்டில் மக்கள் அமைதி, செழிப்பு, வளரும் தலைமுறையினரிடம் நிலையான முன்னேற்றம் ஏற்பட இத்தினம் கொண்டாடப்படுகிறது.
2.இலங்கையில் அடிமைகளை வேலைக்கமர்த்துவதற்கெதிரான சட்டமூலம் கொண்டுவரப்பட்ட நாள் 20 டிசம்பர் 1844.
3.சோவியத்தின் முதலாவது இரகசியக் காவல்துறை  “சேக்கா” அமைக்கப்பட்ட நாள் 20 டிசம்பர் 1917.

 

– தென்னகம்.காம் செய்தி குழு