இந்தியா

1.ரயில் பயணத்தின்போது பயணிகள் அடையாள ஆவணமாக e – ஆதாரை காட்டலாம் என ரயில்வே அனுமதி அளித்துள்ளது.
2.கேரளத்தின் கோழிக்கோடு அருகே கோயிலாண்டி என்ற ஊரில், தங்கமங்கை பி.டி.உஷா அமைத்துள்ள விளையாட்டு பள்ளியை பிரதமர் மோடி கானொலிக் கட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்.இந்த பள்ளிக்கு தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ.8.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.


உலகம்

1.ஐ.நா. அமைப்பின் கீழ் உள்ள கடல் சட்ட சர்வதேச தீர்ப்பாயத்தின் (International Tribunal for the Law of the Seas) நீதிபதியாக இந்தியாவின் Neeru Chadha தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2.2017-ம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசு, A Horse Walks Into a Bar என்ற புத்தகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.இதனை எழுதியவர் இஸ்ரேலை சேர்ந்த டேவிட் கிராஸ்மேன் [David Grossman] ஆவார்.இதனை மொழிபெயர்த்தவர் ஜெசிகா கொஹேன் [Jessica Cohen] ஆவார்.
3.இத்தாலி, டென்மார்க், பெல்ஜியம் ஆகிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு புதிய தூதர்களை நியமனம் செய்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பெல்ஜியத்துக்கான தூதராக காயத்ரி இசார் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதராகவும் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தாலிக்கான தூதராக ரீனட் சந்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.டென்மார்க்குக்கான இந்திய தூதராக அஜித் வினாயக் ஸ்டீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலக அகதிகள் தினம் (World Refugee Day).
மதக்கலவரம், இனக்கலவரம், உள்நாட்டுப் போர், இயற்கைப் பேரழிவுகள் போன்ற காரணங்களால் தங்கள் நாட்டில் வாழ்வதற்கு வழி இல்லாமல் வெளியேறுபவர்கள்தான் அகதிகள். அகதிகளும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் வாழ உரிமை உண்டு. அவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் 2000ஆம் ஆண்டில் ஜூன் 20 ஐ உலக அகதிகள் தினமாக ஐ.நா. சபை அறிவித்தது.
2.1840 – சாமுவெல் மோர்சு தந்திக்கான காப்புரிமையைப் பெற்றார்.
3.1877 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வர்த்தக முறை தொலைபேசி சேவையை கனடா, ஆமில்ட்டனில் ஆரம்பித்தார்.
4.1887 – சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் மும்பையில் திறக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு