இந்தியா

1.எல்லை பாதுகாப்பு படையின் சார்பில் ராஜஸ்தானில் உள்ள எல்லைப் பகுதியில் ஜனவரி 15 முதல் ஜனவரி 28 வரை Operation Sard Hawa நடைபெறுகிறது.
2.IITகளில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என Timothy Gonsalves தலைமையிலான கமிட்டி பரிந்துரை வழங்கியுள்ளது.
3.அடுத்த பத்தாண்டுகளுக்குள் 50% உள்ள டீசல் என்ஜின்களின் பயன்பாட்டை குறைத்து , 90% அளவிற்கு மின்சார இன்ஜின்களை இயக்குவதின் மூலமாக 40,000 கோடி ரூபாய்களை சேமிப்பதற்கு Mission 41K என்ற திட்டத்தை இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
4.இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது ரைசினா பேச்சுவார்த்தை மாநாடு, புதுடெல்லியில் ஜனவரி 17 முதல் ஜனவரி வரை நடைபெற்று முடிந்துள்ளது.இந்த மாநாட்டின் கருப்பொருள் – The New Normal : Multilateralism with Multi Polarity.
5.CBIயின் புதிய இயக்குநராக , டெல்லி காவல்துறை ஆணையர் அலோக் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.பிரதமர் மோடி , உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் அடங்கிய குழு இவரை தேர்வு செய்துள்ளது.
6.2016ம் ஆண்டுக்கான தேசிய வீரதீர விருது 12 சிறுமிகள் மற்றும் 13 சிறுவர்களுக்கு ( மொத்தம் 25 பேர் ) வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 பேருக்கு மரணத்திற்கு பிந்தைய விருதாக வழங்கப்பட்டுள்ளது.பாரத் விருது — பிஜூ ( Tarh Peeju ),கீதா சோப்ரா விருது — தேஜஸ்வீதா பிரதான் & ஷிவானி காண்ட்,சஞ்சய் சோப்ரா விருது — சுமித் மம்கெயின்,பாபு ஹைதானி விருது — Roluahpuii , Tushar Verma & H Lalhriatpuii,மற்றவர்கள் அனைவருக்கும் தேசிய வீரதீர பொது விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ல் பிரதமர் மோடி இந்த விருதுகளை வழங்குகிறார்.
7.‘இந்தியாவின் கருந்துளை மனிதர்’ என அழைக்கப்பட்ட விஞ்ஞானி சி.வி.விஸ்வேஸ்வரா (78) பெங்களூருவில் வயது முதிர்வால் காலமானார்.


உலகம்

1.751 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவராக , இத்தாலி நாட்டைச் சேர்ந்த அன்டோனியோ தஜனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2.போட்டித்திறமைகளுக்கான சர்வதேச குறியீட்டில்(Global index of talent competitiveness (GTI) 2017) இந்தியா 92வது இடம் வகிக்கிறது.இதில் முதல் இடத்தை சுவிட்சர்லாந்தும், சிங்கப்பூர் இரண்டாவது இடத்தையும்,பிரிட்டன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
3.CERN [ The European Organization for Nuclear Research ] அமைப்பில் இந்தியா இணை உறுப்பினராக ( Associate Membership ) இணைந்துள்ளது.ஏற்கனவே 2004 முதல் இந்த அமைப்பில் பார்வையாளர் நாடாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
4.அமெரிக்காவின் ‘ கீப்பர் செக்யூரிட்டி ‘ என்ற கடவுச்சொல் [ Password ] மேலாண்மை நிறுவனம், 2016ம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட 10 கடவுச்சொற்களை பட்டியலிட்டுள்ளது.123456,123456789,qwerty,12345678,111111,1234567890,1234567,123123,987654321,password போன்றவை ஆகும்.
5.சீனாவில் இருந்து இங்கிலாந்துக்கு வர்த்தகத்தை பெருக்க  சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலில் 34 கண்டெய்னர்கள் இணைக்கப்பட்டுள்ளன.இந்த ரெயில் கஜகஸ்தான். ரஷியா, பெலாரஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம், மற்றம் பிரான்ஸ் வழியாக 19 நாள் பயணத்துக்கு பிறகு இங்கிலாந்தை சென்றடைந்தது.


விளையாட்டு

1.இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது இந்தியா.


இன்றைய தினம்

1.முதல் அதிகாரபூர்வமான கூடைப் பந்தாட்ட போட்டி மசாச்சூசெட்டில் இடம்பெற்ற நாள் 20 ஜனவரி 1892.
2.அமெரிக்க அதிபர்கள் பதவி ஏற்கும் தினம் 20 ஜனவரி 1937.

 

– தென்னகம்.காம் செய்தி குழு