Current-Affairs-Updates

இந்தியா

1.உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவன் நகரில் சந்திரோதயா மந்திர் என்ற கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் உலகின் மிக உயரமான கோயிலாக கட்டப்பட உள்ளன.தற்போது மிக உயரமான கட்டிடமாக துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா உள்ளது.புர்ஜ் கலிஃபா கட்டிட  உயரம் 164.042 ஆக உள்ளது.சந்திரோதயா மந்திர் கோயிலின் உயரம் 180.446 ஆக கட்டி முடிக்கப்பட உள்ளன.
2.எல்.ஐ.சி நிறுவனத்தின் புதிய தலைவராக வி.கே. சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்படுள்ளது.ஏற்கனவே வி.கே. சர்மா எல்.ஐ.சியின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் உள்ளார்.முன்னதாக எஸ்.கே.ராய் அந்த பதவியிலிருந்து விலகியதை அடுத்து வி.கே.சர்மாவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
3.ஜம்மு-காஷ்மீரின் லடாக்கில் உள்ள 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஹெமிஸ் மடாலயத்தில் Naropa எனப்படும் ஒரு பெரும் புத்த திருவிழா துவங்கியுள்ளது.இந்த திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும்.

உலகம்

1.மனித கடத்தலில் தப்பி பிழைத்தவர்களின் கண்ணியத்திற்கான  நல்லெண்ண தூதராக UNODC(United Nations Office on Drugs and Crime)-வால் Yazidi இன பெண்ணான நாடியா முராத் பேசீ தாஹ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமைதிக்கான நோபல் பரிசு வேட்பாளர் ஆவார்.
2.இன்று பெண் விடுதலைக்குப் போராடிய அன்னி பெசண்ட் அம்மையார் இறந்த நாள்.இவர் இறந்த தேதி 20 செப்டம்பர் 1933.

விளையாட்டு

1.டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டினா மிக்கேல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.இவர் தன்னை எதிர்த்து விளையாடிய செக்.குடியரசின் கேத்ரினா சினிக்கோவாவை 3-6, 6-4, 6-4  என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இந்த வெற்றியின் மூலம் இவர் தனது முதல் டபிள்யூடிஏ பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
2.அசர்பைஜானில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சுபாங்கர் பிரமானிக் தனிநபருக்கான 50 மீட்டர் ரைஃபிள் புரோன் பிரிவு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.முன்னதாக 50 மீட்டர் ரைஃபிள் புரோன் பிரிவில் அஜய் நிதீஷ் , சுபாங்கர் பிரமானிக் , பட்டேக் சிங் கொண்ட இந்திய அணி இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.இந்தியா சார்பில் இதேபிரிவில் கலந்து கொண்ட மற்றொரு அணி வெண்கலம் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.