தமிழகம்

1.சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான வசதியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று தொடங்கி வைத்துள்ளார்.
2.தென்னை விவசாயிகள் வருமானத்தை பெருக்கும் வகையில் தென்னை மரத்திலிருந்து “நீரா” பானத்தை உற்பத்தி செய்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.


இந்தியா

1.திருவனந்தபுரம் சென்ட்ரல் விளையாட்டு அரங்கத்தில் வருகிற 28-ஆம் தேதி நாட்டிலேயே முதல் முறையாக திருநங்கைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
2.சி.பி.எஸ்.இ. மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை இந்தி பாடத்தை கட்டாயமாக்கும் பரிந்துரைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.


உலகம்

1.ஹெச் 1பி விசா வழங்க கட்டுபாடு விதிக்கும் செயற்பாட்டு ஆணையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி கையெழுத்திட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய இரண்டு நகரங்களின் கதை புதினம் வெளியிடப்பட்ட நாள் 20 ஏப்ரல் 1859.
2.திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 20 ஏப்ரல் 1926.
3.அப்போலோ 16 சந்திரனில் இறங்கிய நாள் 20 ஏப்ரல் 1972.

 

– தென்னகம்.காம் செய்தி குழு