current3

இந்தியா

1.ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் தற்போது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக உள்ளார்.இவர், அடுத்த மாதம் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

1.அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த  2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டான்.இந்த ரகசிய தாக்குதலை அமெரிக்காவைச் சேர்ந்த ‘நேவி சீல்’ என்கிற சிறப்புப்படை மேற்கொண்டது.இந்த தாக்குதலை முன்நின்று நடத்திய நேவி சீல் படை வீரர்களில் ஒருவரான மேத்யூ பிஸொனேட் என்பவர், ஒசாமாவை தாக்குதல் பற்றிய தன்னுடைய அனுபவத்தை ’நோ ஈஸி டே’ என்ற பெயரில் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.
2.போர்ப்ஸ் பத்திரிகையின் சர்வதேச அளவில் ஐ.டி. துறையைச் சேர்ந்த 100 கோடீஸ்வரர்கள் அடங்கிய பட்டியலை வெளியுட்டுள்ளது.அதில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 7,800 கோடி டாலர் சொத்துடன் முதலிடத்தில் உள்ளார்.அமேசான் நிறுவனங்களின்  தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் பிசோஸ் 6,620 கோடி டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.பேஸ்புக்கின் தலைவர் மற்றும்  தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூகர்பெர்க் 3-வது இடத்தில் உள்ளார்.இந்த பட்டியலில்(100 ஐ.டி. துறை கோடீஸ்வரர்களில்) அமெரிக்கா முதல் இடத்திலும்,19 கோடீஸ்வரர்களுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.

விளையாட்டு

1.ரியோ ஒலிம்பிக் போட்டியின் தடகள பிரிவில் 100 மீட்டர் ., 200 மீட்டர் ., 4 × 100 மீட்டர் ( குழு போட்டி ) ஆகிய போட்டிகளில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் தங்கம் வென்றுள்ளார்.இவர்  2008 மற்றும் 2012 ஒலிம்பிக்கிலும் இதே பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளார்.தொடர்ந்து மூன்று முறை  மூன்று பிரிவுகளில் தங்கம் வென்ற முதல் நபர் என்ற  சாதனையைப் படைத்துள்ளார்