நடப்பு நிகழ்வுகள் – 19 மே 2017
தமிழகம்
1.தமிழ் திரைப்பட வர்த்தக சபை சென்னையில் கடந்த மே 17-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக அபிராமி ராமநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2.புதுச்சேரி முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி(83), புதுச்சேரி வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கடந்த மே 15-ம் தேதி காலமானார்.
இந்தியா
1.முதல் குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த மே 17-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது.
2.முன்னாள் ஹரியானா முதல்வரும் தேசிய லோக்தள தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா தனது 82-வது வயதில் சிறையிலிருந்தே 12-ம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
3.ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு மாவட்ட உதவி ஆட்சியர் பதவி வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, கடந்த மே 16-ஆம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வர்த்தகம்
1.அமெரிக்காவில் உள்ள போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் உலகளவில் மாற்றங்கள் ஏற்படுத்தும் 25 சாதனையாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி (60), முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.இரண்டாவது ஆண்டாக போர்ப்ஸ் பத்திரிக்கை இந்த பட்டியலை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
உலகம்
1.உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கணினிகளைக் குறிவைத்து “ரேன்சம்வேர்” என்ற வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதனால் உலகம் முழுவதும் பல கணினிகள் முடங்கியுள்ளன.
இன்றைய தினம்
1.கனடாவின் மொன்ட்றியால் நகரம் அமைக்கப்பட்ட நாள் 19 மே 1604.
2.சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவிய நாள் 19 மே 1971.
– தென்னகம்.காம் செய்தி குழு