தமிழகம்

1.இரண்டு முறை சர்வதேச சாம்பியன் பட்டம், 5 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற கார் ரேஸ் வீரர் அஸ்வின், மார்ச் 17 நள்ளிரவில் சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் மனைவியுடன் உடல் கருகி உயிரிழந்தார்.


இந்தியா

1.வயது முதிர்ந்த மூத்த குடிமக்கள் தங்கள், அன்றாட கடமைகளை நிறைவேற்ற உதவி புரியும் வகையிலான CHINTU என பெயரிடப்பட்ட இயந்திர மனிதனை,புனேவை சேர்ந்த Maharashtra Institute of Technology (MIT), IBM நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
2.பீகாரின் ராஜ்கிர் நகரில் ( நாளந்தா மாவட்டம் ) சர்வதேச புத்த மத மாநாடு மார்ச் 17 முதல் மார்ச் 19 வரை நடைபெறுகிறது.இந்த மாநாட்டை புத்த மத தலைவர் தலாய் லாமா தொடங்கி வைத்தார்.


உலகம்

1.உலகின் 10வது பெரிய வைரம், சியரா லியோன் நாட்டின் கிழக்கே கோனா பகுதியில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இது 706 காரட் மதிப்பு கொண்டது.இந்த வைரத்தை இமானுவேல் மோமோக் என்பவர் தோண்டியெடுத்து, அந்நாட்டு அரசிடம் ஒப்படைத்துள்ளார்.


விளையாட்டு

1.ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் MY STORY என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.


இன்றைய தினம்

1.சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்ட நாள் 19 மார்ச் 1932.
2.நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்த நாள் 19 மார்ச் 1861.

 

– தென்னகம்.காம் செய்தி குழு