தமிழகம்

1.தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார். இதையொட்டி  நேற்று சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.அவை தொடங்கியதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்து வாக்கெடுப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டார்.வாக்கெடுப்பில் 122 உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்தனர். 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தலையிலான அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.


இந்தியா

1.சமூக சேவகி இரோம் சர்மிளாவின் மக்கள் எழுச்சி நீதிக் கூட்டணி கட்சிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ரூ.50,000 நன்கொடை வழங்கியுள்ளார்.மணிப்பூர் சட்டப்பேரவைக்கு வரும் மார்ச் 4 மற்றும் 8-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


வர்த்தகம்

1.மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நவீன தொழில்நுட்பத்திலான புதிய மின்சார கார் சென்னையில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.இந்த கார்க்கு “ஈ2ஓப்ளஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.


உலகம்

1.பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் திருமணம் தொடர்பான மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவையில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


விளையாட்டு

1.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பொது மேலாளர் (வணிகம்) ஆர்.பி.ஷா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று கோப்பர்நிக்கஸ் பிறந்த தினம் (Copernicus Birth Anniversary Day).
கோப்பர்நிக்கஸ் 1473ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று போலந்து நாட்டில் பிறந்தார். பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற பூமி மையக்கோட்பாட்டை மாற்றி சூரிய மையக்கோட்பாட்டை அறிவித்தார். பூமி உள்பட அனைத்துக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற புரட்சிகரமான கொள்கையை வகுத்து, வானியலில் புதிய வளர்ச்சிக்கு வித்திட்டார்.
2.கிராமபோனின் காப்புரிமத்தை தாமஸ் ஆல்வா எடிசன் பெற்ற நாள் 19 பிப்ரவரி 1878.
3.சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவிய நாள் 19 பிப்ரவரி 1986.
4.இன்று ‘தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 19 பிப்ரவரி 1855.

 

– தென்னகம்.காம் செய்தி குழு