current-affairs

தமிழகம்

1.தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த எண்ணூரில் செயல்பட்டு வந்த அனல் மின்நிலையம் அதன் நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் முடிவடைந்துவிட்டதால் அதன் செயல்பாடு கடந்த நவம்பர் 16-ஆம் தேதி இரவு 8.30 மணியோடு நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

1.தில்லியில் உள்ள மருத்துவமனையில் உடல் நலப் பிரச்னை காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் எஸ்.கே. சின்ஹா கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி காலையில் காலமானார்.அவருக்கு வயது 92.
2.பாரத ஸ்டேட் வங்கி  நாடு முழுவதும் உள்ள 686 பெட்ரோல் பங்க்குகளில் ஏடிஎம் கார்டு மூலம் ரூபாய் 2000 பணமெடுக்குவதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது.
3.இன்று மூன்றாவது இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 19 நவம்பர் 1917.

உலகம்

1.அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் புலனாய்வு மைய இயக்குநர் மைக்கேல் பிளின்னை நியமித்துள்ளார்.
2.உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் அகராதி  2016-ம் ஆண்டின்  சிறந்த வார்த்தையாக  post-truth என்னும் வார்த்தையை தேர்வு செய்துள்ளது.
3.ஐ.நா. பொது சபை தலைவர் பான் கீ மூனுக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான ‘லெஜியான் ஆப் ஹானர்’ வழங்கப்பட்டுள்ளது.
4.இன்று உலகப் கழிப்பறை தினம் (World Toilet Day).
உலக நாடுகளில் 2.5 பில்லியன் மக்கள் சுகாதாரத்தைப் பேணுவதில்லை. 1.1 மில்லியன் மக்கள் திறந்தவெளிக் கழிப்பறைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் ஆண்டுதோறும் 2 லட்சம் குழந்தைகள் நோயால் பாதிக்கின்றனர். இவர்களைப் பாதுகாக்க, உலக சுகாதாரத்தைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 19 ஐ உலகக் கழிப்பறை தினமாக 2013ஆம் ஆண்டில் அறிவித்தது.
5.இன்று சர்வதேச ஆண்கள் தினம் (International Men’s Day).
சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடுவது என்பது பெண்களுக்கு எதிரானது அல்ல. இத்தினம் ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில்தான் உள்ளது. இது ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் விளங்குகிறது. உலகில் ஆண்களைக் கௌரவப்படுத்தவும், சமூகத்திற்கு புரிந்த மகத்தான தியாகங்களை நினைவு கூரவும், அவர்களின் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது.

விளையாட்டு

1.அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடருக்கான மும்பை  இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.