தமிழகம்

1.தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருவோரை வரவேற்க 2,640 வரவேற்பாளர்களை தமிழக காவல்துறை புதிதாக நியமித்துள்ளது.
2.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உள்பட்ட திருக்கனூரில் முதல் முறையாக  முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
3.2016-ஆம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது கவிஞர் சுகுமாரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.இந்திய விமானப்படையின் தற்போதைய தலைமை தளபதி ஏர் மார்ஷல் அரூப் ராகா டிசம்பர் 31ல் ஓய்வு பெறுவதையொட்டி அடுத்த தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் பீரேந்திர சிங் தனோ ( B.S. Dhanoa ) நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் டிசம்பர் 31ம் தேதி பதவி ஏற்றுக்கொள்வார் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2.இந்திய ராணுவத்தின் தற்போதைய தலைமை தளபதி தல்பீர் சிங் டிசம்பர் 31ல் ஓய்வு பெறுவதையொட்டி  அடுத்த 26வது தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் டிசம்பர் 31ம் தேதி பதவி ஏற்றுக்கொள்வார் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3.சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் [ Indus Water Treaty (IWT) ] உள்ள வேறுபாடுகள் பற்றி சீராய்வு செய்வதற்கன குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.குழுவின் தலைவராக பிரதமரின் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.உறுப்பினர்களாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்,வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர்,நிதி , சுற்றுச்சூழல் , நீர் வளம் , மின்சாரம் ஆகிய துறைகளின் முதன்மை செயலாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
4.தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களை போல ராஜஸ்தானில் ‘அன்னபூர்ணா ரசோயி’ என்ற பெயரில் மலிவு விலை உணவகங்களை முதல்வர் வசுந்தரா ராஜே திறந்து வைத்துள்ளார்.இதில் சிற்றுண்டி, ரூ.5-க்கும், முழுச் சாப்பாடு ரூ.8-க்கும் விற்பனை செய்யப்படுகினறன.
5.வெளிநாடுகளை உளவு பார்க்கும் ” ரா ” [ RAW – Research And Analysis Wing ] எனப்படும் உளவு அமைப்பின் தலைவராக அனில் தஸ்மானா ( Anil Dasmana ) நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவிற்குள்ளே செயல்படும் பயங்கரவாதிகளை / சமூக செயல்பாடுகளை உளவு பார்க்கும் ஐ.பி.எனப்படும் ( Intelligence Bureau – IB) உளவு அமைப்பின் தலைவராக ராஜிவ் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.
6.நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் நிதி திரட்டும்போது ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் தனிநபர்கள் யாரும் நன்கொடை பெறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


உலகம்

1.வெனிசுலாவில் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி 2-ந் தேதி வரை 100 பொலிவார் நோட்டுகள் செல்லும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதற்குள் மக்கள் பழைய பொலிவார் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கியை தென்சீனக் கடல் பகுதியில் சீனா கைப்பற்றியுள்ளது.


விளையாட்டு

1.தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து 7 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் சாம்பின்ஷிப் பட்டத்தை வசப்படுத்தியுள்ள இந்திய வீரர் விஜேந்தர்சிங், டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் பிரான்சிஸ் செகாவை (தான்சானியா) வீழ்த்தி 8வது தொடர் வெற்றியுடன் ஆசிய பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
2.உத்தர பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் நடைபெற்ற 11வது  ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பறியுள்ளது.மேலும் 15 ஆண்டுகளுக்கு பின்னர் சாம்பியன் பட்டத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இன்றைய தினம்

1.ஹாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படம் டைட்டானிக் ரிலீஸ் ஆன நாள் 19 டிசம்பர் 1997.
2.போர்த்துகீச குடியேற்ற நாடான டாமன் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்ட நாள் 19 டிசம்பர் 1961.
3.அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனிய ராணுவத் தலைவர் ஆன நாள் 19 டிசம்பர் 1941.
4.சந்திரனுக்கு கடைசி தடவையாக மனிதனை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பூமி திரும்பிய நாள் 19 டிசம்பர் 1972
5.உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் வழங்கப்படும் பரிசுக்கோப்பை  பிரேசிலில் அந்நாட்டு கால்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்ட நாள் 19 டிசம்பர் 1983.
6.இன்று இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பிறந்தநாள்.இவர் பிறந்த தேதி 19 டிசம்பர் 1934.
7.இன்று இந்தியாவின் கோவா விடுதலை அடைந்த நாள்.விடுதலை அடைந்த தேதி 19 டிசம்பர் 1961.

– தென்னகம்.காம் செய்தி குழு