இந்தியா

1.மராட்டிய மாநிலத்தில் மத்திய ரெயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் மும்பை மாதுங்கா ரெயில் நிலையம் முழுமையாக பெண்களால் இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரெயில் நிலையத்தில் மொத்தம் 30 பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.மாதுங்கா ரெயில் நிலைய மேலாளராக மம்தா குல்கர்னி பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
2.நாட்டின் ஒவ்வொரு 50 கிலோமீட்டர் தொலைப்பகுதியிலும் பாஸ்போர்ட் மையத்தை அமைப்பதில் அரசாங்கம் வேலை செய்து வருவதாக மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் தெரிவித்துள்ளார்.
3.வரிவிதிப்பு போன்ற சிக்கல்களை தீர்க்க ஆறு மாதங்களில் சுமார் இரண்டு லட்சம் இளைஞர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் GST பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.மக்கள் பிரதான மந்திரியுல் விகாஸ்யோஜனா Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY). இன் கீழ் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


விளையாட்டு

1.மெல்பேர்னில் நடைபெற்ற விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஹரிந்தர் பால் சந்து , ஆஸ்திரேலியாவின் ரெக்ஸ் ஹேட்ரிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.1900 – பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமானது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு