தமிழகம்

1.உயர்கல்வி பயிலவிரும்பும் திருநங்கைகளுக்கு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி வழங்கப்படும் என்றும் ,கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இந்தியா

1.தென்னிந்தியாவின் முதல் ஜெம் மற்றும் ஜுவல்லரி பயிற்சி நிலையத்தை, கர்நாடகாவின் உடுப்பியில் அமைப்பதற்கான அடிக்கல்லை, மத்திய வர்த்தகதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறுவியுள்ளார்.
2.முன்னாள் உத்ரகாண்ட் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் Yug Purush Bharat Ratna Atal ji என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
3.16வது வடகிழக்கு பிராந்திய காமன்வெல்த் பாராளுமன்ற கூடுகை, மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் ஜூன் 14ல் துவங்கியது.மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இம்மாநாட்டை துவக்கி வைத்துள்ளார்.இந்த மாநாட்டின் கருப்பொருள் – வடகிழக்கு மற்றும் கிழக்கு நோக்கிய கொள்கை [North East and Look East Policy] ஆகும்.
4.மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில், ராஜபுர் ( Rajapur) அருகே பபுல்வாடி(Babulwadi) யில் இந்தியன் ஆயில் கார்பரேசன் (IOC), பாரத் பெட்ரோலியம் (BP), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன் (HPCL) ஆகியவை இணைந்து உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை மூன்று லட்சம் கோடி ரூபாய் செலவில் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளன.


விளையாட்டு

1.தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக N. ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் N. சீனிவாசனின் சகோதரர் ஆவார்.ஒலிம்பிக் சங்க செயலாளராக பெர்னான்டர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2.சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.


இன்றைய தினம்

1.1910 – அமெரிக்காவில் வாஷிங்டனில் முதல் தடவையாக தந்தையர் நாள் கொண்டாடப்பட்டது.
2.1912 – ஐக்கிய அமெரிக்காவில் 8-மணி நேர வேலைத்திட்டம் அமுலாகியது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு