இந்தியா

1.17 ஜனவரி 2017 முதல் 23 ஜனவரி 2017 வரை 28வது சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.இதன் கருப்பொருள் — உங்கள் பாதுகாப்பு உங்கள் குடும்பத்தை காக்கும் ; சாலையில் விழிப்புடன் இருப்பீர்.
2.ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு தில்லி சென்றடைந்தார்.இன்று காலை அவர் பிரதமர் நரேந்திர மோடியைச்  சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
3.ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நீதிமன்றம் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து ஹிந்தி நடிகர் சல்மான்கானை விடுதலை செய்துள்ளது.
4.பயன்பாட்டில் இல்லாத 105 மத்திய சட்டங்களை அரசமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்குவதற்கு மத்திய அமைச்சரவை நேற்று  ஒப்புதல் வழங்கியுள்ளது.நீக்கப்பட்டுள்ள இந்த சட்டங்களில் 2008-ஆம் ஆண்டு சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டமும், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரின் ஊதியம், ஓய்வூதியம் தொடர்பான சட்டமும் அடங்கும்.
5.பாராளுமன்ற நிதிக் குழுவின் முன்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் நேற்று ஆஜர் ஆனார்.அப்போது பழைய ரூ 500,ரூ 1000 நோட்டுகளை நீக்குவதற்கான நடவடிக்கை கடந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


உலகம்

1.உலகம் முழுவதும் இனவெறியை எதிர்த்துப் போராடி வரும் தென்னாப்பிரிக்காவின் அகமது கத்ராடா அறக்கட்டளைக்கு இந்தியாவின் சார்பாக ரூ.1 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ரூ.1 கோடிக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 17-ம் தேதி நடைபெற்றது.
2.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், அவர் இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


வர்த்தகம்

1.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் நிகர லாபமாக ரூ. 7,506 கோடி ஈட்டியதாகத் தெரிவித்துள்ளது.


 இன்றைய தினம்

1.இன்று ஜேம்ஸ் வாட் பிறந்த தினம்.
ஜேம்ஸ் வாட் 1736ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் நாள் ஸ்காட்லாந்து நாட்டில் ஐந்தாம் கிளைடில் உள்ள கிரீனாக் என்னும் துறைமுகப் பகுதியில் பிறந்தார். கல்வியை தாயாரிடம் வீட்டிலேயே கற்றார். முதன்முதலாக நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்தார். நீராவி இயந்திரத்தில் இவர் செய்த மேம்பாடுகளே பிரிட்டிஷ் மற்றும் உலகின் பிற நாடுகளிலும் தொழில் புரட்சி ஏற்பட அடிப்படையாக அமைந்தன.
2.அமெரிக்கா- இங்கிலாந்து இடையே முதன்முதலாக வானொலி ஒலிபரப்பு ஆரம்பமான நாள் 19 ஜனவரி 1903.
3.இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் 19 ஜனவரி 1966.

 

– தென்னகம்.காம் செய்தி குழு