current3

தமிழகம்

1.ஏழை எளிய மக்கள் குறைவான செலவில் பயன் பெரும் வகையில் தமிழ்நாட்டில் 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த  திருமண மண்டபங்கள் சென்னையில் தண்டையார்பேட்டை, வேளச்சேரி, அயப்பாக்கம், பருத்திப்பட்டு, பெரியார் நகர், கொரட்டூர், மதுரை மாவட்டத்தில் அண்ணா நகர், திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் கொடுங்கையூர், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை ஆகிய 11 இடங்களில் கட்டப்பட உள்ளன.இந்த திடத்தை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலமாக செயல்படுத்தப்பட உள்ளன.

இந்தியா

1.கோவாவில் உள்ள தெற்கு கோவாவில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களுக்கான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக, கூட்டுக் குழு ஒன்றை அமைக்க இருப்பதாக, இந்த நாடுகளின் சார்பில் பங்கேற்ற  அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர்.

உலகம்

1.இன்று சிலி நாட்டில் இராணுவத்தினர் நாள் கொண்டாடப்படுகிறது.
2.ஜப்பானின் 2016ம் ஆண்டுக்கான புகுவோகா விருதுக்கு இசைத்துறையில் செய்த சேவையை பாராட்டி இந்திய திரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு  வழங்கப்பட்டுள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அமீத் அக்கம்போவுக்கு அகாடமிக் பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானை சேர்ந்த கட்டிட கலை  நிபுணர் யாஸ்மின் லாரிக்கு கலை மற்றும் கலாசார பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது.இந்த விருதை 1990ம் ஆண்டு முதல் ஜப்பான் நாட்டின் புகுவோகா நகரில் உள்ள யோகோபோடியா அமைப்பு ஆசிய கலாசாரத்தை  பாதுகாப்பவர்கள் அல்லது உருவாக்குபவர்களுக்கு வழங்கி வருகிறது.

விளையாட்டு

1.பிரேசில் நாட்டின் ரியோ நகரில்  நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் ஈரான் நாட்டைச் சேர்ந்த 45 வயதான சர்பிராஸ் பஹ்மான் கோல்பர்நிஜாத்  என்ற வீரர் ஆண்களுக்கான சி4/சி5 சைக்கிளிங் போட்டியில் பங்கேற்க போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.இது இவர் பங்கேற்கும் இரண்டாவது ஒலிம்பிக் போட்டி ஆகும்.இதனால் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் இடத்தில் ஈரான் நாட்டு கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
2.தில்லியில் நடைபெற்ற ஆசிய கோப்பை சைக்கிளிங் போட்டியில் ஹாங்காங் அணி 11 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.5 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் இந்திய அணி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.