தமிழகம்

1.மே 14 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் இயங்காது என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2.தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யாக கே.என்.சத்தியமூர்த்தியை தமிழக அரசு நியமித்துள்ளது.
3.தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் டிஜிட்டல் உரிமத்தை வழங்கியுள்ளது.


இந்தியா

1.நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் சேரவும், நிறுவனங்களின் வரி அறிக்கையைத் தாக்கல் செய்யவும் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


உலகம்

1.இந்தியர்கள் அதிகளவில் பலன் பெற்றுவந்த ‘457 விசா’ திட்டத்தை ஆஸ்திரேலியா திடீரென ரத்து செய்துள்ளது.
2.பிரிட்டனில் முன்கூட்டியே வரும் ஜூன் 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் தெரசா மே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


விளையாட்டு

1.கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை புரிந்துள்ளார். ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 77 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தினார்.


இன்றைய தினம்

1.அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்த நாள் 19 ஏப்ரல் 1775.
2.முதலாவது விண்வெளி ஆய்வுகூடமான சோவியத் ஒன்றியத்தின் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்ட நாள் 19 ஏப்ரல் 1971.
3.இந்தியாவின் முதலாவது செய்மதி ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்ட நாள் 19 ஏப்ரல் 1975.

 

– தென்னகம்.காம் செய்தி குழு