current2

தமிழகம்

1.தமிழகத்தில் ஒட்டகத்தை வெட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்தியா

1.இந்தியாவின் வயதான பெண் புலியான மச்லி(19), இன்று காலை இறந்தது.மச்லி ராஜஸ்தான் மாநிலம், ரண்தாம்போர் தேசிய புலிகள் சரணாலயத்தில் வசித்து வந்தது.இந்தியாவின் புலிகளின் சராசரியான ஆயுள் காலம்  10 முதல் 15 வயது ஆகும்.
2.‘சன்சாத் ஆதர்ஷ் கிராம் யோஜ்னா’ திட்டத்தின்படி நாடாளுமன்றத்தின் உள்ள ஒவ்வொரு எம்.பி.யும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.அதன்படி மாநிலங்களவை எம்.பி.யான ” சச்சின் டெண்டுல்கர் ” மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் மாவட்டத்தில் டோன்ஜா கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.

உலகம்

1.இன்று உலக மனித நேய தினம்(World Humanitarian Day).போர், இயற்கைப் பேரழிவு, நோய், ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்ட உலக மனித நேய தினம் ஆகஸ்டு 19 அன்று கொண்டாடப்படுகிறது. 2008ஆம் ஆண்டு ஐ.நா. சபையினால் உருவாக்கப்பட்டது. துயரத்தால் பாதிக்கப்பட்டோருக்காக பணிபுரிவோர் மற்றும் இப்பணியில் ஈடுபடும்போது காயம் அடைந்தோர், உயிரிழந்தோர்களை நினைவுகூரும் தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
2.இன்று உலக புகைப்பட தினம்(World Photography Day).லூயிசு டாகுவேரே என்பவர் 1839ஆம் ஆண்டு டாகுரியோடைப் எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை அறிமுகப்படுத்தினார். இதனை பிரான்ஸ் அரசு ஆகஸ்டு 19ஆம் தேதி ப்ரீடுதி வேர்ல்டு என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. புகைப்படத்தின் சிறப்பு, புகைப்படக் காரர்களின் திறமையை கொண்டாடும் வகையில் இத்தினம் அமைகிறது.
3.ஏர்லேண்டர் -10 ( Airlander – 10 ) என்ற விமானத்தை Hybrid Air Vehicles எனும் நிறுவனம் 35.6 மில்லியன் டாலர் செலவில் உருவக்கியுள்ளது.விமானம், ஹெலிகொப்டர் மற்றும் விண்கலம் என மூன்றையும் கலந்து செய்த கலவையே இந்த விமானம்.இந்த விமானம் 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 85 அடி உயரமும் கொண்டது.இங்கிலாந்தின் கேர்டிங்டான் ( Cardington ) என்ற விமானத்தளத்திலிருந்து முதல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.இது உலகின் மிகப்பெரிய விமானமானமாகும் .

விளையாட்டு

1.ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் இறுதி போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.ஸ்பெயினின் வீராங்கனை  கரோலினா மரின்னுடன்  போராடி தோல்வி அடைந்தார்.கரோலின் தங்கப் பதக்கத்தை கைப்பறியதோடு ஐரோப்பிய வீராங்கனை ஒருவர்   ஒலிம்பிக் பாட்மிண்டன் வரலாற்றில் முதல் தங்கப் பதக்கம் வென்றவர்  என்ற பெருமையைப் பெற்றார்.ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இது இரண்டாவது பதக்கமாகும்.ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெறுவது இதுவே முதல் முறை.ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இந்தியா சார்பில் 5 வீராங்கனைகள்(பி.வி.சிந்து உள்பட) மட்டுமே பதக்கம் வென்றுள்ளனர்.
2.ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.இதன் மூலம் பாட்மிண்டன் போட்டியில் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் சிந்து படைத்துள்ளார்.
3.ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவுக்கு நான்கு ஆண்டுகள் விளையாட  தடை விதிக்கப்பட்டுள்ளது.