current-affairs

தமிழகம்

1.தமிழக அரசு  வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2015-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது, தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.மேலும் www.sciencecitychennai.in  என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவம், அடிப்படை தகுதிகள், விதிகள் ஆகியன பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

1.முதன் முறையாக இந்தியாவில் உள்ள வங்கிகளில் உள்ள டெபாசிட் தொகை செப்டம்பர் 2016 நிலவரப்படி  100 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

உலகம்

1.வடகொரியாவின் குசாங் பகுதியில் அமெரிக்காவுக்கு எதிராக நடத்திய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாக தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது.

வர்த்தகம்

1.இந்தியாவில் 3,500 பெட்ரோல் நிலையங்களை அமைக்க பிரிட்டனைச் சேர்ந்த பி.பி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
2.`மேட் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் பேட்டரியில் ஓடும் பஸ்ஸை ஹிந்துஜா குழுமத்தின் அங்கமான அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது.

விளையாட்டு

1.சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) தடகள ஆணைக்குழு உறுப்பினராக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
2.டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் நேற்று தொடங்கியது.
3.ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிர்ஜியோஸ் விதிமுறைகளை மீறியதற்காக அவருக்கு 8 வாரம் தடை விதிக்கப்படுவதாக ஏடிபி (ஆடவர் டென்னிஸ் சங்கம்) தெரிவித்துள்ளது.மேலும்  மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறும்பட்சத்தில் அவருடைய தடைக்காலம் 3 வாரங்களாக குறைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
4.சீன தைபே கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் செளரவ் வர்மா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இவர் தன்னை எதிர்த்து விளையாடிய மலேசியாவின் டேரன் லியூ காயம் காரணமாக போட்டியிலிருந்து பாதியில் விலகியதையடுத்து செளரவ் வர்மா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
5.இந்தியாவைச்சேர்ந்த குத்துச்சண்டை வீரர் நீரஜ் கோயத், ஆஸ்திரேலியாவின் Ben Kite ஐ வீழ்த்தி WBC வெல்டர் வெயிட் ஆசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

24.இன்று நாகப்பட்டினம் மாவட்டம்.

இம்மாவட்டம் 1991 அக்டோபர் 18 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. வங்காள விரிகுடாக் கடலோரத்தில் அமைந்துள்ளதால், 2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.
இந்த மாவட்டம் தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கம் மிகுந்த மாவட்டம் என்று அறியப்படுகிறது.இம்மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற கிருஸ்த்துவர்களுடைய வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா கோவிலும் உள்ளது. இஸ்லாமியர்களுடைய பிரசித்தி பெற்ற நாகூர் மற்றும் பாப்பாவூர் தர்காவும், பிரசித்தி பெற்ற சப்த விதாங்கர் கோயில், நீலாயதாட்சி சமேதா காயாரோகண சுவாமி கோயில், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும், எட்டுக்குடி முருகன் கோவிலும் இம்மாவட்டத்தில் தான் உள்ளது.இம்மாவட்டத்தில் அமைந்துள்ள காவிரிப்பூம்பட்டிணம் என்று இலக்கியப் புகழ்பெற்ற பூம்புகார் சோழர்களின் துறைமுக நகரமாய் விளங்கியது.