தமிழகம்

1.அ.தி.மு.க. சார்பில் “அம்மாவின் அரண்” என்ற அலைபேசி செயலி வெளியிடப்பட்டுள்ளது.பெண்களுக்கென பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது.


இந்தியா

1.உத்தரகாண்ட் மாநிலத்தின் 8-வது முதல் மந்திரியாக பா.ஜ.க.வைச் சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கே.கே.பால் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.


விளையாட்டு

1.இந்திய விளையாட்டு ஆணையத்தின் ( Sports Authority Of India – SAI ) உறுப்பினராக பேட்மிண்டன் வீராங்கனை ஜூவலா கட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று ருடால்ஃப் டீசல் பிறந்த தினம் (Rudolf Diesel Birth Anniversary Day).
ருடால்ஃப் டீசல் 1858ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று பாரிஸ் நகரில் பிறந்தார். இவரின் கண்டுபிடிப்பு தொழில் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இவர் நீராவி இயந்திரத்திற்குப் பதிலாக டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இது உலகின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இவரின் கண்டுபிடிப்பு உலகை வேகமாக மாற்றி அமைத்தது.
2.அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நாள் 18 மார்ச் 1850.
3.வணிக உரிமைகளை வழங்கும் உடன்பாட்டில் ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட நாள் 18 மார்ச் 1850.
4.சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் ஆன நாள் 18 மார்ச் 1965.

 

– தென்னகம்.காம் செய்தி குழு