இந்தியா

1.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கிரையோஜெனிக் என்ஜினினை வெற்றிகரமாக நேற்று  பரிசோதனை செய்தது.மகேந்திரகிரியில் நடைபெற்ற இந்த சோதனை சுமார் 640 விநாடிகள் நடைபெற்றது.
2.உச்சநீதி மன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி நவீன் சின்ஹா, கேரள மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி மோகன் ஷாந்தனா கவுடர், சத்தீஸ்கர் மாநில தலைமை நீதிபதி திபக் குப்தா, கர்நாடக மாநில ஐகோர்ட் நீதிபதி அப்துல் நசீர் ஆகிய  5 நீதிபதிகளும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் இவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
3.கேரள சமூக நலத்துறையின் சார்பில் “புன்னகை” என்ற திட்டத்தின் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச பல் செட் வழங்க இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ளது.
4.சம்பளத்தை வங்கிக்கணக்கில் செலுத்த வழி வகை செய்யும் ஊதிய திருத்த சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
5.அதிமுக தற்காலிக பொதுச் செயலர் சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தண்டனை வழங்கியது.கர்நாடகத்தில் 12 ஆண்டுகளாக  இந்த சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வந்தது.இதற்காக கர்நாடக அரசு ரூ.12.04 கோடியை  செலவு செய்துள்ளது.எனவே இந்த தொகையை திரும்ப வழங்கக் கோரி தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
6.உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக தற்போது 28 பேர் உள்ளனர்.அதில் பெண் நீதிபதியாக ஆர்.பானுமதி ஒருவர் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.


வர்த்தகம்

1.இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையத்தின் (SEBI) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் தியாகியின் பதவிக் காலத்தை மத்திய அரசு குறைத்துள்ளது.முன்பு அஜய் தியாகியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் என அறிவித்த மத்திய அரசு தற்போது மூன்று ஆண்டுகளாக குறைத்துள்ளது.


இன்றைய தினம்

1.முதலாவது அதிகாரபூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அலகாபாத்தில் ஆரம்பமான நாள் 18 பிப்ரவரி 1911.
2.முதற்தடவையாக ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்ட நாள் 18 பிப்ரவரி 1929.
3.நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட நாள் 18 பிப்ரவரி 1959.

 

– தென்னகம்.காம் செய்தி குழு