Current-Affairs-Updates

தமிழகம்

1.இன்று இந்திய விடுதலைப் போராட்ட வீரர்  வ. உ. சிதம்பரம்பிள்ளை இறந்த தினம்.இவர் இறந்த தேதி 18 நவம்பர் 1936.

இந்தியா

1.மத்திய சுகாதார துறை அமைச்சர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக No More Tension என்ற அலைபேசி செயலியை வெளியிட்டுள்ளார்.
2.இந்தியாவில் முதல் செரி திருவிழா மேகாலயாவின் ஷில்லாங்கில் நவம்பர் 14 முதல் நவம்பர் 17 வரை நடைபெற்றது.
3.நவம்பர் 15 / 2016 வரை இந்தியாவில் 272 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக The Controller General of Patents, Designs & Trade Marks அமைப்பு அறிவித்துள்ளது.
4.கடந்த 2015-ம் ஆண்டில் இந்திய மக்களில் 20 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாக, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.சர்வதேச அளவில் ரத்த அழுத்தம் பாதிப்பில் 22.6 கோடி பேருடன் சீனா முதலிடத்தில் உள்ளது.இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகம்

1.2016ம் ஆண்டுக்கான Tata Literature Live! Lifetime Achievement Award அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி எழுத்தாளர் அமிதவ் கோஷ் க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2.சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுவதற்கு அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
3.பழைய ருபாய் நோட்டுகளை சீனாவில் உள்ள இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாது என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
4.இன்று லாத்வியா விடுதலை அடைந்த நாள்.லாத்வியா, ரஷியாவிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் 18-11-1918.
5.விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த 56 வயதான பெக்கி விட்சன் இன்று பயணிக்கவுள்ளார்.இதன் மூலம் உலகின் மிக வயதான விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.இந்த பயணத்திற்கு எக்ஸ்பிடிஷன் 50 / 51 என்று பெயரிடப்பட்டுள்ளது.

விளையாட்டு

1.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக டிரவர் ஹான்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும் தேர்வுக்குழு உறுப்பினராக கிரேக் சேப்பலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததால் அந்த அணியின் தேர்வுக்குழு தலைவர் ராட் மார்ஷ் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து டிரவர் ஹான்ஸ் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2.இந்திய தடகள வீரர் தரம்பிர் சிங் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதற்காக போட்டிகளில் பங்கேற்க 8 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.