தமிழகம்

1.முழுநேர முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள், ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை பெற  விருப்பம் உள்ள  தாழ்த்தப்பட்ட-பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்தியா

1.இந்தியாவில் முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பிரத்யோக பள்ளி Sahaj International School, டிசம்பர் 30ல் கொச்சியில் துவங்க உள்ளது.
2.பெங்களூருவில் ஏவியேடர்ஸ் ஏர் கெஸ்க்யூ என்ற தனியார் நிறுவனம் சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் (ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்) சேவையை முதல்–மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்துள்ளார்.
3.இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஹரியானா மாநில அரசு பெண்களின் பாதுகாப்பிற்காக “தன்னார்வ பெண் காவலர்கள்” என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.
4.சில்லறைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகளுக்கு சில்லறைக்கு பதிலாக பண மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படுகின்றன.இந்த கூப்பனை இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் பயன்படுத்தி கொள்ளலாம்.
5.300 கி.மீ. தொலைவுக்கு மேல் உள்ள இலக்கை தாக்கும் வகையில் பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை மேம்படுத்த இந்தியாவும், ரஷியாவும் ஒப்புக் கொண்டுள்ளன என்று மக்களவையில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
6.2015-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருது அகதிகளுக்கான ஐநா ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த விருதை ஐ.நா. அகதிகள் ஆணையர் சார்பில் , இந்தியா மற்றும் மாலத்தீவுகள் அகதிகளுக்கான ஐ.நா. ஆணைய அதிகாரி யாசுகோ ஷிமிஸு பெற்றுக் கொண்டுள்ளார்.இந்த விருது காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.


உலகம்

1.அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் நாட்டுக்கான அமெரிக்க தூதராக வழக்குரைஞர் டேவிட் ஃபிரெட்மேனை தேர்வு செய்துள்ளார்.
2.ஆஸ்கர் ரேஸிலிருந்து ‛விசாரணை’ படம் வெளியேறியுள்ளது. ஆஸ்கர் விருதுக்கான 9 படங்கள் அடங்கிய முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  அதில் விசாரணை படம் இடம்பெறவில்லை. இந்த 9 படங்களில் இருந்து 5 படங்கள் இறுதிச்சுற்றுக்குத் தேர்வு செய்யப்படும்.


வர்த்தகம்

1.பஜாஜ் ஆட்டோ நிறுவனம், “டொமினார் 400′ என்ற புதிய ரக மோட்டார் சைக்கிளை தில்லியில் அறிமுகம் செய்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச குடிபெயர்ந்தோர் தினம் (International Migrants Day).
வேலை வாய்ப்பிற்காக பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுகின்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு சட்டப்படியான உரிமைகள் கிடைப்பதில்லை. மேலும் வன்முறை, துன்புறுத்தல், அடக்கு முறைக்கும் ஆளாகின்றனர். ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் குடியேறுபவர்களை தனது சொத்தாக மதித்து நடத்த வேண்டும் என்பதற்காக இத்தினம் 2001ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.
2.ரஷ்யாவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய ஜோசப் ஸ்டாலின் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 18 டிசம்பர் 1878.
3.துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறிய நாள் 18 டிசம்பர் 1926.
4.இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீது தாக்குதல் நடத்திய நாள் 18 டிசம்பர் 1999.இதில் அவரது வலது  கண் பறிபோனது.
5.சனி கோளின் சந்திரன் எப்பிமேத்தியஸ் கண்டுபிடிக்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 1966.
6.சோவியத் விண்கலம் சோயூஸ் 13 வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்ட நாள் 18 டிசம்பர் 1973.
7.லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்ட நாள் 18 டிசம்பர் 1987.
8.எச்.டி.எம்.எல் 4.0 வெளியிடப்பட்ட நாள் 18 டிசம்பர் 1997.
9.தமிழ் விக்கிப்பீடியாவில் 50,000-வது கட்டுரை எழுதப்பட்ட நாள் 18 டிசம்பர் 2012.

– தென்னகம்.காம் செய்தி குழு