இந்தியா

1.கேரளவைச் சேர்ந்த ஐ.யூ.எம்.எல். கட்சி எம்எல்ஏ, அப்துல்லா, உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், தேர்தல் ஆணைய அனுமதி பெற்று நேற்று நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் சென்னையில் வாக்களித்துள்ளார்.
2.தேசிய பேரிடர் மேலாண்மை, கேரளா மாநில பேரிடர் மேலாண்மை துறையுடன் இணைந்து Crowd Management என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கை திருவனந்தபுரத்தில் நடத்தியுள்ளது.
3.நாடு முழுவதும் நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் நிலுவையில் கொண்ட அரசு துறைகளில் ரெயில்வே முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த தகவலை சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில்,(ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில்) இரு சக்கர வாகன விற்பனையில்,ஹோண்டா நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தையும்,ஹிரோமோட்டோ கார்ப் நிறுவனம் மூன்றாவது இடத்தையும்,யமஹா நிறுவனம் நான்காவது இடத்தையும்,சுசூகி நிறுவனம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.


உலகம்

1.Everest International Model United Nations, Regional Edition 2017 என்னும் மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்று முடிந்துள்ளது.


விளையாட்டு

1.கோல்ஃப் விளையாட்டின்போது பெண்கள் லெக்கிங்ஸ், குட்டையான தளர்வான ஸ்கர்ட்ஸ் போன்ற ஆடைகளை அணியக்கூடாது. அப்படி அணிந்தால் 1000 டாலர் அபராதம் விதிக்கப்படும் என பெண்களுக்கான தொழில்முறை கோல்ஃப் சங்கம் தெரிவித்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் (Nelson Mandela International Day).
தென்னாப்பிரிக்காவின் நிறவெறி அரசுக்கு எதிராகப் போராடி 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜூலை 18 ஆம் நாளை ஐ.நா. சபை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக 2009ஆம் ஆண்டு அறிவித்தது. அமைதிக்கும், மனித உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் நெல்சன் மண்டேலா ஆற்றிய பணியைக் கௌரவிக்க இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
2.1965 – சோவியத்தின் சோண்ட் 3 விண்கலம் ஏவப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு