current-affairs

தமிழகம்

1.மகளிர் இலக்கியங்களைப் படைக்கும் படைப்பாளிகளுக்கு இந்த ஆண்டு முதல் “அம்மா இலக்கிய விருது’ வழங்கப்படுகிறது.இதற்கான அறிவிப்பை  தமிழக அரசு கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது.
2.தேனி மாவட்டம் போடி அருகே 2500 ஆண்டுகள் பழமையான கற்திட்டைகள் எனப்படும் கல்லறைகளை வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
3.இன்று கவிஞர் வாலியின் நினைவு நாள்.இவர் இறந்த தேதி 18 ஜூலை 2013.

இந்தியா

1.காங்கிரஸ் கட்சியின் பீமா கண்டு(36) அருணாச்சல பிரதேசத்தின் 10 வது முதலமைச்சராக பதவி ஏற்றார்.இவர் இந்தியாவிலேயே குறைந்த வயதில் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
2.சிபிஎஸ்இ எனப்படும் மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் தலைவராக, மத்திய நிதியமைச்சகத்தின் கூடுதல் செயலராக இருக்கும் ராஜேஷ் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகம்

1.நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்ட நாள் 18 ஜூலை 1966.
2.வியட்நாம் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்த நாள் 18 ஜூலை 1977.
3.இன்று உருகுவேயில் அரசியலமைப்பு நாள்.

விளையாட்டு

1.ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டனாக, கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.துணை கேப்டனாக எஸ்.வி.சுனில் நியமிக்கப்பட்டுள்ளார்.