இந்தியா

1.சாலை விதிகளை மீறி செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை படம் பிடித்து அனுப்பி வைப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என உத்திர பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
2.1985 ஜூலை முதல் 1986 டிசம்பர் வரை உச்சநீதிமன்ற 17 வது தலைமை நீதிபதியாக பணியாற்றிய P.N.பகவதி வயது முதிர்வால் காலமானார்.
3.கேரளா மாநிலம் கொச்சி ஜவஹர்லால் சர்வதேச மைதானத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.


உலகம்

1.உலகின் மிகச் சிறிய மற்றும் விலை குறைந்த விமானத்தை தயாரித்துள்ளது அமெரிக்காவை சேர்ந்த ’Cirrus Aircraft’ நிறுவனம்.ஒற்றை என்ஜினுடன் ஒரே பைலட் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் தாராளமாக பயனம் செய்யலாம்.இந்த விமானம் மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது.மேலும் 28,000 அடி உயரம் வரை பறக்கக்கூடியதாகும்.


விளையாட்டு

1.சுலோவேக்கியா நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது உலக தனிநபர் செஸ் போட்டியில், இந்தியாவின் Kutwal (இந்திய ரயில்வே ஊழியர்) தங்கம் வென்றுள்ளார்.ஏற்கனவே பெண்கள் பிரிவில் தமிழ்நாட்டின் ஜெனித்தா தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இன்றைய தினம்

1.இன்று உலக தந்தையர் தினம்.
சோனாரா ஸ்மார்ட் டோட் என்ற பெண் அமெரிக்காவில் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் என்பவருக்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தார். இவர் பிறந்தவுடன் தாய் இறந்துவிட்டார். தனது தந்தையே கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்தார். தனது தந்தைக்கு மரியாதை செலுத்தும் வகையில் 1910ஆம் ஆண்டில் தந்தையர் தினத்தைக் கொண்டாடினார்.இதனை அடிப்படையாகக்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி 1966ஆம் ஆண்டில் தந்தையர் தினத்தை அறிவித்தார்.
2.1908 – பிலிப்பைன்சு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
3.1954 – அடையாறு புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டது.
4.கஜகஸ்தானின் முதலாவது செயற்கைக்கோள், காஸ்சாட் ஏவப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு