இந்தியா

1.மத்திய அரசின் சார்பில் எம். ஜி.ஆர். அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு ₹ 15 மதிப்பில் தபால்தலையும் , ₹ 11 மதிப்பிலான அஞ்சல் உறையும் வெளியிடப்பட்டுள்ளது.ஏற்கனவே 1990ல் ₹60 மதிப்பில் எம். ஜி. ஆர். நினைவு தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.
2.ராஜஸ்தானின் பிகானீரில் 24வது சர்வதேச ஒட்டக திருவிழா(24th International Camel Festival) ஜனவரி 15-ம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது.
3.ரயில் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீதச் சலுகை வழங்குவதுபோல் 58 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கும் 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
4.பூமியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை பாதுகாப்பாக அகற்ற ஆளில்லா குட்டி விமானத்தை குஜராத்தைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவர் ஹர்ஷவர்தன் ஜாலா உருவாக்கியுள்ளார்.
5.வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் தேர்தல் ஆணையம், ECI Apps என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.


உலகம்

1.நிலவில் காலடி எடுத்து வைத்த இறுதி விண்வெளி வீரர் அமெரிக்காவின் ஜின் செர்னன் [ Eugene Cernan ] வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார்.செர்னன் 1972-ம் ஆண்டு, அமெரிக்காவால் நிலவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு செலுத்தப்பட்ட ‘அப்பலோ 17’ விண்கலத்துக்கு தளபதியாக இருந்தவர். நிலவில் கடைசியாக காலடி வைத்த நபர் ஜின் செர்னன் ஆவார்.நிலவில் முதலில் காலடி எடுத்த வைத்த அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங் 2012-ம் ஆண்டு மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
2.விக்கி லீக்ஸ்க்கு ராணுவ ரகசியத்தை கசியவிட்ட வழக்கில் 35 ஆண்டு சிறை தண்டனை பெற்ற திருநங்கை செல்சியா மேன்னிங்கை மன்னித்து, விடுதலை செய்யுமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இன்றைய தினம்

1.தெலுங்கு திரைப்பட நடிகரும், ஆந்திரா முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவ் மறைந்த தினம் 18 ஜனவரி 1996.
2.எக்ஸ்ரே கருவி முதன்முதலாக காட்சிக்கு வைக்கப்பட்ட நாள் 18 ஜனவரி 1896.
3.ஹவாய் தீவுகளைக் கண்டறிந்த முதலாவது ஐரோப்பியன் பேப்டன் ஜேம்ஸ் குக், இதற்கு சான்ட்விச் தீவுகள் எனப் பெயரிட்ட நாள் 18 ஜனவரி 1778.

 

– தென்னகம்.காம் செய்தி குழு