current2

தமிழகம்

1.விலங்குகள் நல வாரிய தூதராக நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா

1.ஆசியாவில் சிறந்த 25 அருங்காட்சியகங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 5 அருங்காட்சியகங்கள் இடம்பிடித்துள்ளன.ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லேயில் உள்ள ஹால் ஆஃப் ஃபேம் அருங்காட்சியகம் முதலிடத்திலும்,ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரிலுள்ள பகோர் கி ஹவேலி அருங்காட்சியகம் இரண்டாவது இடத்திலும்,மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவிலுள்ள விக்டோரியா மெமோரியல் ஹால் அருங்காட்சியகம் மூன்றாவது இடத்திலும்,ஹைதராபாதிலுள்ள சாலார் ஜங் அருங்காட்சியகம் நான்காவது  இடத்திலும்,ஜெய்சால்மரிலுள்ள போர் நினைவு அருங்காட்சியகம் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.இந்த தகவலை டிரிப் அட்வைஸர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.ஆனால் உலக அளவில் சிறந்த 25 அருங்காட்சியகங்கள் பட்டியலில் இந்தியாவின் ஓர் அருங்காட்சியகம் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2.குஜராத் மாநிலம் நவ்சாரியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரே நேரத்தில் 989 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு 989 விளக்குகளை ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
3.அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை இழந்து உள்ளது.43 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி பிமா காண்டு தலைமையில் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.இவர்கள் அனைவரும் அருணாச்சல பிரதேசம் மக்கள் கட்சியில் இணைந்து உள்ளனர்.

உலகம்

1.இன்று உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் (World Water Monitoring Day).

உலகம் முழுவதும் தண்ணீர் வளங்களைப் பாதுகாப்பதில் பொது விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டை உருவாக்க வேண்டும். உள்ளூர் நீர்நிலைகளின் அமிலத்தன்மை, காரத்தன்மை ஆகியவற்றை பரிசோதித்து பார்த்து, நீரின் தரம் குறையாமல் பாதுகாத்திட வேண்டும். மேலும் தண்ணீரை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் Clean Water Foundation இத்தினத்தை 2003இல் அறிவித்தது.

விளையாட்டு

1.சர்வதேச ஃபென்சிங் கத்திச் சண்டை போட்டியில்  சென்னையைச் சேர்ந்த டெரில்(17), இரண்டு வென்கலப் பதக்கங்களை வென்று, சாதனைப் படைத்துள்ளார்.இந்திய அளவில் ஒரு வீரர் இரண்டு போட்டிகளிலும் பதகங்களை வென்றது இதுவே முதல் முறை.