இந்தியா

1.மத்திய அரசிடம் இருந்து அனைவருக்கும் மின்சாரம் பெறும் திட்டத்தில் உத்திரபிரதேச அரசு கையெழுத்திட்டுள்ளது.
2.இமாச்சல பிரதேச அரசு + 2 மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதி கொண்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ 1,000 மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு மாதம் ரூ 1,500 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
3.இந்தியன் ரெயில்வே ரூ.680 கோடிக்கு ரெயில் என்ஜின் மற்றும் டீசல் ரெயில்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது.
4.ஐதராபாத்தை சேர்ந்தவன் சிறுவன் அகஸ்தியா ஜெயிஸ்வால் 11 வயதிலேயே  பிளஸ்-2 தேர்வில் 63 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளான்.


உலகம்

1.சிங்கப்பூரின், கார்டியர் விமன்ஸ் இனிஷியேடிவ் விருது நைரீதா சர்வீசஸ் (Naireeta Services) என்ற நிறுவனத்தின் மூலம் நீர் மேலாண்மை கருவிகளை சிறு விவசாயிகளுக்கு வழங்கி வருவதற்காக திருப்தி ஜெயின்க்கு வழங்கப்பட்டது.
2.உலகின் மிக வயதான பெண்மணியும், 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கடைசி நபருமான இத்தாலி நாட்டைச் சேர்ந்த எம்மா தனது 117-வது வயதில் காலமானார்.


விளையாட்டு

1.இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் நடைபெற்ற ஜூனியர் கிராண்ட் பிரிக்ஸ் பாட்மின்டன் , பெண்கள் (15 வயது) ஒற்றையர் பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை காயத்ரி , சக இந்திய வீராங்கனை சமியா இமாத் பரூக்கியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.பெண்கள் (15 வயது) இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் காயத்ரி, சமியா இமாத் பரூக்கி ஜோடி இந்தோனேஷியாவின் கெல்லி லாரிசா, ஷெலாண்ட்ரி வயோலா ஜோடியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


இன்றைய தினம்

1.இன்று உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தினம் (World Heritage Day).
சர்வதேச நினைவுச் சின்னம் பாதுகாப்பு ஆலோசனை சபை சார்பாக 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று ஒரு கருத்தரங்கம் டுனிசியாவில் நடைபெற்றது. உலகளவில் நினைவுச் சின்னங்களைக் கொண்டாட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதனை யுனெஸ்கோ ஏற்றுக்கொண்டது. முதன்முதலாக 1983ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று உலகப் பாரம்பரியச் சின்னங்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
2.ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 1912.
3.கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூயார்க் வந்து சேர்ந்த நாள் 18 ஏப்ரல் 1912.
4.பிபிசி வானொலி தனது பழமையான செய்தி அறிக்கையில் இந்நாளில் எந்த செய்திகளும் இல்லை என அறிவித்த நாள் 18 ஏப்ரல் 1930.
5.அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் 18 ஏப்ரல் 1949.

 

– தென்னகம்.காம் செய்தி குழு