current-affairs

தமிழகம்

1.சென்னை மியூசிக் அகாடமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்ட நாள் 18 ஆகஸ்டு 1928.

இந்தியா

1.தில்லியில் உள்ள சிறார் நீதி வாரியம்(ஜேஜேபி) பிறப்பித்துள்ள உத்தரவில் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சிறுவன்,வயது வந்தோர் எதிர் கொள்ளும் வழக்கு விசாரணையை போன்ற  விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
2.இன்று ரக்‌ஷா பந்தன் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் ஆவணி மாத பௌர்ணமி தினத்தன்று ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.
3.ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 150 மீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதை மகாராஷ்டிர ஆளுநர் மாளிகைக்குக் கீழே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகம்

1.வீடியோ அழைப்புகளுக்காக கூகுள் நிறுவனம் ‘டூவோ’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.கூகுள் ஸ்டோரில் இதனை பதிவு செய்து கொள்ளலாம்.

விளையாட்டு

1.ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்.ஒலிம்பிக்  போட்டி வரலாற்றில் மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் ஆவார்.ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையும் சாக்‌ஷி மாலிக் ஆவார்.இவர் ஹரியாணா மாநிலம் ரோட்டக்கை சேர்ந்தவர்.
2.8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி 20 போட்டித் தொடர் வரும் 24ந் தேதி தொடங்குகிறது.இந்த தொடருக்கான கோப்பையை இந்திய ஒருநாள் போட்டியின் அணித்தலைவர் டோணி சென்னையில் இன்று அறிமுகபப்டுத்தினார்.