current-affairs

தமிழகம்

1.மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 85-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ‘கனவு’ தொடர்பான அவரது பொன்மொழிகள் தாங்கிய தபால் அட்டை கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த கண்காட்சியை இணையதளத்தின் மூலம் கண்டு ரசிக்கலாம்.

இந்தியா

1.10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கடந்த 2015-16-ஆம் நிதி ஆண்டில் முதல்முறையாக ஏர்-இந்தியா நிறுவனத்தின் லாபம் ரூ.105 கோடியாக உயர்ந்துள்ளது.
2.புது டெல்லியில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி The Women of India Festival 2016 என்னும் கண்காட்சியை  துவக்கி வைத்துள்ளார்.
3.கேரள அரசு வீடுகளில் நாய்கள் வளர்ப்பவர்கள் வரும் 31-ந்தேதிக்குள் லைசென்ஸ்களை அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

உலகம்

1.சீனாவில் ‘கடல் அரிசி’ என்னும் ஒரு வகை அரிசியை அதிக அளவில் உற்பத்தி செய்ய ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
2.சீனா, இரண்டு விஞ்ஞானிகளுடன் ‛ஷெங்ஸோ-11′ என்ற ராக்கெட்டை நேற்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

வர்த்தகம்

1.இந்திய எண்ணெய் நிறுவனமான எஸ்ஸார் ஆயிலை ரஷியாவின் எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெப்ட் குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்களும் 1,300 கோடி டாலர் மதிப்பில் கையகப்படுத்தியுள்ளன.

விளையாட்டு

1.துபாயில் பிங்க் பந்தில் நடைபெறும்  பாகிஸ்தான்-மே.இ.தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா சாதனை படைத்துள்ளார்.இவர் தனது 17-வது டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.மேலும் 17 டெஸ்டுகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய பந்து வீச்சாளராகவும் திகழ்கிறார்.ஆஸ்திரேலியாவின் டர்னர், இங்கிலாந்தின் பார்ன்ஸ், ஆஸ்திரேலியாவின் கிரிம்மெட் இவர்களுடன் 2-வது இடத்தைப் பகிர்ந்துள்ளார். முதலிடத்தில் ஜி.ஏ.லோமான் என்ற இங்கிலாந்து வீரர் உள்ளார், இவர் 16 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை புரிந்துள்ளார்.அஸ்வின் 18 டெஸ்ட் போட்டிகளில் 100  விக்கெட்டுகளைக் கைப்பற்றி 3-ம் இடத்தில் உள்ளார்.
2.முதலாவது பிரிக்ஸ் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி தென்னாப்ரிக்காவை தோற்கடித்து கோப்பையை வென்றுள்ளது.மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் ரஷ்யா சீனாவை தோற்கடித்துள்ளது.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

23.இன்று தேனி மாவட்டம்.

தேனி மாவட்டம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஜூலை 25, 1996-ஆம் ஆண்டு தேனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.இந்த மாவட்ட உருவாக்கத்திற்காக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான டாக்டர். கே. சத்யகோபால் தனி அதிகாரியாக முதலில் நியமிக்கப்பட்டார். பின்னர் அவரே முதல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தேனி மாவட்டம் ஜனவரி 1, 1997 முதல் செயல்படத் துவங்கியது. தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு, இந்தியாவில் முதன் முறையாக சர்வதேசத் தரச்சான்று (ஐ.எஸ்.ஓ.,-9001) விருது வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் முல்லை, வைகை, வராக நதிகள் பாய்ந்து வளம் சேர்க்கின்றன. இதனால் இம்மாவட்டத்தின் பெரும் பகுதிகள் பச்சைப்பசேல் என்று இயற்கை அழகுடன் உள்ளது.இம்மாவட்டத்தின் வைகை அணை,முல்லைப் பெரியாறு அணை,சோத்துப்பாறை அணை,சுருளி நீர் வீழ்ச்சி,கும்பக்கரை அருவி,மேகமலை,
வெள்ளிமலை,போடி மெட்டு போன்ற சுற்றுலா தலங்களும் உள்ளன.